வீரதீர சாரதிகள் மற்றும் ஓட்டுனர்களின் திறமையை சோதிக்கும் “Commando Challenge”

Published By: Priyatharshan

14 Sep, 2016 | 04:48 PM
image

இலங்கை பந்தய சாரதிகள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் CEAT Sri Lanka நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து, இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவு ஏற்பாடு செய்துள்ள Commando Challenge என்ற தனித்துவமான நிகழ்வு,சவால்மிக்க சுப்பர்குரொஸ் பந்தயத்தை 3 தினங்கள் இடம்பெறும் இலக்குடனான பயணத்துடன் இணைத்து, இந்த ஆண்டு ஒக்டோபரில் ஏற்பாடு செய்துள்ளது.

இலக்குடனான பயணமானது 2016 ஒக்டோபர் 3 முதல் 5 வரை இடம்பெறவுள்ளதுடன், சுப்பர்குரொஸ் நிகழ்வானது ஒக்டோபர் 9 அன்று இடம்பெறவுள்ளது.

மீண்டும் ஒரு முறை மோட்டார் பந்தய நிகழ்விற்கு அனுசரணை வழங்க CEAT Sri Lanka முன்வந்துள்ளதுடன், இந்த நிகழ்விற்கு பிரதான அனுசரணையை வழங்குவதுடன், 3 ஆவது தடவையாகவும் “CEAT - SRI LANKA” சுப்பர் தொடருக்கு ஆதரவளிக்கின்றது.

வீரசாகசத்துடன் பந்தய ஓட்டத்தை வழங்கும் ஒரு புத்தாக்கமான எண்ணக்கருவுடன் இலங்கையின் தனிச்சிறப்புமிக்க நிலப்பரப்பினூடாக ஊடறுக்கும் வகையில் இலக்குடனான பயண நிகழ்வு அவதானத்துடன் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

இது கண்டியில் இருந்து ஆரம்பித்து, வத்தேகம, செம்புவத்த, லோக்கல் ஓயா, மகியங்கனை, சோரபொரவெவ, மகா ஓயா, தமன, அறுகம்குடா ஆகிய பிரதேசங்களைக் கடந்து சென்று, அண்ணளவாக 566 கிமீ தூரத்தை உள்ளடக்கியாறு குடா ஓயாவில் நிறைவடையும். முதலாவது ஆவது தினத்தில் கண்டியிலிருந்து உல்கிட்டிய வரையான 166 கிமீ தூரத்தையும் 2 ஆவது தினத்தில் உல்கிட்டியவிலிருந்து அறுகம்குடா வரையான 260 கிமீ தூரத்தையும் 3 ஆவது தினத்தில் போட்டியாளர்கள் அறுகம்குடாவிலிருந்து முடிவு எல்லையான ஊவா குடா ஓயா வரையான 140 கிமீ தூரத்தையும் கடக்க வேண்டும்.

வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்ட அல்லது மாற்றங்கள் இன்றிய விளையாட்டு பாவனை வாகனங்கள் இந்நிகழ்வில் இடம்பெறவுள்ளதுடன், பெரும்பாலும் வர்த்தகத்துறையைச் சார்ந்தவர்கள், வீரசாகச ஆர்வலர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வருகை தருகின்ற சிலரும் இதில் பங்குபற்றுபவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா குடா ஓயாவில் அமைந்துள்ள கொமாண்டோ படைப்பிரிவின் பயிற்சிக் கல்லூரியில் அமைந்துள்ள நாட்டின் மிக நீளமானதும்ரூபவ் வேகமானதும் எனக் கருதப்படுகின்ற சவால்மிக்க 1.68 கிமீ தூரம் கொண்ட பந்தயத்திடலில் சுப்பர்குரொஸ் நிகழ்வு 2016 ஒக்டோபர் 9 அன்று இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய கொமாண்டோ படைப்பிரிவின் கட்டளைத் தளபதியான பிரிகேடியர் ரால்ஃப் நுகேரா கூறுகையில்,

“இந்த Commando Challenge ஆனது ‘கொமாண்டோ’ அனுபவம் மற்றும் இலங்கை பந்தய சாரதிகள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்துடன் நாம் புதிதாக ஏற்படுத்தியுள்ள பங்குடமை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு பல நோக்கங்களைக் கொண்டது. கொமாண்டோ படைப்பிரிவின் நலன்புரி மற்றும் மேம்பாட்டிற்கு உதவுதல் கொமாண்டோ படைப்பிரிவு வீரசாகச உல்லாசத்துறை கொண்டுள்ள திறமைகளை ஊக்குவித்தல், இலங்கையில் கரடுமுரடான நிலப்பரப்பில் மோட்டார் பந்தயத்தை ஊக்குவித்தல் மற்றும் குடா ஓயாவில் வசிக்கும் மக்களுக்கு பொருளாதார வாய்ப்புக்களை ஏற்படுத்தல் ஆகியவற்றிற்கு இது நற்பயனளிக்கும் என நாம்  நம்புகின்றோம். மேல் மத்திய கிழக்கு மற்றும் ஊவா ஆகிய நான்கு மாகாணங்களை ஊடறுத்துச் செல்லும் பந்தய வீரர்கள் எமது அழகிய தீவின் நிலப்பரப்பு மற்றும் காலநிலையின் பன்முகத்தன்மைகளை அனுபவித்து மகிழ முடியும். வீரசாகச உற்சாத்தை வெளிக்கொணர்ந்துரூபவ் அனைவரும் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சவாலைக் கையிலெடுத்துரூபவ் பாதுகாப்பான சூழலில் அதனை முன்னெடுக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரடுமுரடான நிலப்பரத்தில் வாகனம் ஓட்டுதல், முகாம் அமைத்தல், சுற்றுப்புறங்களை ரசித்தல், மீன்பிடித்தல்ரூபவ் புகைப்படம் எடுத்தல்ரூபவ் தீ மூட்டும் முகாம்ரூபவ் BBQ, கலாச்சார நிகழ்வுகள் அடங்கிய மாலைப்பொழுதுகள் மற்றும் பல அம்சங்களை ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியுடன் அனுபவித்து இனிதாகப் பொழுதைப் போக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.”

இலங்கை பந்தய சாரதிகள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தின் தலைவரான நிஷான் வாசலதந்திரி கூடியிருந்தோர் முன்னிலையில் உரையாற்றுகையில்,

“தனித்துவமான இந்த நிகழ்விற்காக கொமாண்டோ படைப்பிரிவுடன் இணைந்துள்ளதையிட்டு பெருமை கொள்கின்றோம். அவர்களுடைய விசாலமான அனுபவம் மற்றும் திறமைகளை ஒன்றுதிரட்டி மோட்டார் ஆர்வலர்களுக்காக இத்தகைய வேறுபட்ட வகையிலான நிகழ்வொன்றை ஏற்பாடு செய்கின்றமை மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது.

இலக்குடனான பயணம் மற்றும் பந்தயம் ஆகியவற்றை ஒன்றிணைப்பது இந்நிகழ்வில் அதிகளவான எண்ணிக்கையில் போட்டியாளர்கள் பங்குபற்றுவதற்கு எமக்கு இடமளிப்பதுடன் அவர்கள் இந்நிகழ்வின் போது இலங்கையின் இயற்கை வனப்பை கண்டுகளிக்கும் வாய்ப்பையும் அவர்களுக்கு வழங்குகின்றது.”

“Commando Challenge” என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுப்பர்-குரொஸ், இலங்கையின் சுப்பர்குரொஸ் பந்தயத்தின் தந்தை என்று போற்றப்படுபவரும், இலங்கை பந்தய சாரதிகள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ஹான்ஸ் ரால்ஃப் கார்பின்ஸ்கியின் வழிகாட்டலின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் சர்வதேச பந்தய குரொஸ் சுற்றுப்போட்டித் தடங்களுக்கு இணையான தடத்துடன் புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

ஊவா குடா ஓயாரூபவ் கொமாண்டோ பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் ஒக்டோபர் 9 அன்று பந்தய வீரர்கள் மயிர்கூச்செறியும் மோட்டார் விளையாட்டு அனுபவத்தைப் பெற்றுக்கொள்வர் என்பது நிச்சயம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right