(எம்.எப்.எம்.பஸீர்)

மசாஜ் நிலையம் ஒன்றில் சேவையாற்றிய பெண்ணொருவரை, இரு நாட்களாக பிலியந்தலை -கொலமுன்ன பகுதியில், அறையொன்றில் அடைத்து வைத்து  கொடூரமாக் தாக்கி சித்திரவதைச் செய்ததாக கூறி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

119 அவசர அழைப்பு இலக்கத்துக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பிலியந்தலை பொலிஸார், குறித்த  பொலிஸ் கான்ஸ்டபிளை இன்று கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.

மொரட்டுவ பொலிஸ் நிலையத்தில் விஷேட கடமைக்காக இணைக்கப்பட்டிருந்த  பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந் நிலையில் இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட  தாக்குதலில் காயமடைந்துள்ள பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் திருமணமாகதாவர் எனவும்,  பதிக்கப்பட்ட பெண் திருமணமானவர் எனவும் தெரிவித்த பொலிஸார்,  இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமான பின்னர், பொலிஸ் கன்ஸ்டபிள் வாடகைக்கு பெற்ற அறையில் தனிமையில்  தங்கியிருந்த போது  இந்த சித்திரவதை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறினர்.

 இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைக்ளை பிலியந்தலை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.