அடுத்த தலைமுறைக்கு ஆபத்து

By Digital Desk 2

13 Sep, 2021 | 09:15 PM
image

சத்ரியன்

 நாட்டில் தீவிரமடைந்துள்ள கொரோனா தொற்று படிப்படியாக குறைந்துதணியும் என்று முன்னைய சுகாதார கணிப்புகள் பெரும்பாலும் பொய்யாகவே தெரிகின்றநிலையில், சுகாதார நிபுணர்கள் தரப்பில் இருந்து அதிர்ச்சியான ஒரு அறிவிப்புவெளியாகியிருக்கிறது.

டி சொய்சா மகப்பேற்று மருத்துவமனையின் பெண் நோயியல் நிபுணர்மருத்துவர் ஹர்ஷ அத்தப்பத்து நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், பெண்கள்கருத்தரிப்பதை ஒரு வருடத்துக்கு பிற்போடுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்.

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்து கிட்டத்தட்ட 20 மாதங்கள் ஆகின்றநிலையில், முதல்முறையாக இவ்வாறான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

உலக சனத்தொகை அதிகரித்த போது, பல நாடுகள் குடும்பக் கட்டுப்பாட்டுதிட்டங்களை அறிவித்தன.

சீனா ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்று அறிமுகம் செய்ததிட்டத்தை பின்னர், ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ என்று மாற்றிக் கொண்டது.

இந்தியாவும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற திட்டத்தை உறுதியாக கடைப்பிடிக்கிறது.

சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் தண்டனை, என்று அச்சுறுத்தும்சட்டதிட்டங்கள் கூட அமுல்படுத்தப்பட்டன.

இதன் விளைவாக சீனாவில் இப்போது முதியவர்கள் பெருகி விட்டனர்.துடிப்புடன் பணியாற்றக் கூடிய இளையோர் குறைந்து விட்டனர்.

இதனால் சீனா அரசு அண்மையில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளக்கூடாது என்ற சட்டத்தை தளர்த்தியிருக்கிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-12#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்