என்.கண்ணன்

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களை கையாளுகின்ற பிரச்சினைகளுக்கு அப்பால், அதனால் உயிரிழப்பவர்களின் பிரச்சினை தீவிரமான ஒன்றாக மாறியிருக்கிறது.

யாழ்ப்பாணத்திலும்,வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் அண்மையில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்திருக்கின்றன.

குறிப்பாக, வீடுகளில் உயிரிழப்பவர்களில் பலர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். 

திடீர் திடீரென நிகழும் இத்தகைய இறப்புகள் மக்களை அதிர்ச்சியடையவைத்திருக்கிறது.

தொற்றை அறியாதவர்களும், தொற்றை மறைத்தவர்களும்இவ்வாறு வீடுகளில் உயிரிழக்கின்றனர்.

பெருமளவானோர் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுகின்ற போதும், அதனை வெளியே கூறாமல், பரிசோதனையை தவிர்த்துக் கொள்ளுகின்றனர்.

மருத்துவமனை மற்றும், சிகிச்சை மையங்களில் காணப்படும், வசதிக் குறைபாடுகள் காரணமாகவே, அவர்கள், பரிசோதனைகளில்இருந்து தப்பிக்க முனைகின்றனர்.

இவ்வாறு இருந்து விட்டு, தாமதமாக மருத்துவமனைக்குச் செல்பவர்களால் உயிரிழப்பு அதிகரிப்பதாக யாழ்.போதனா மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி அண்மையில் கூறியிருக்கிறார்.

அதேவேளை தொற்றுக்கான எந்த அறிகுறிகளும் இல்லாமல் திடீரென உயிரிழப்பவர்கள்,இறப்புக்குப் பின்னரான பரிசோதனையில் தொற்றாளர்கள் என அடையாளப்படுத்தப்படுகின்ற போது, உறவினர்களால், சுகாதார அதிகாரிகள் சந்தேகத்துடன் பார்க்கப்படும் நிலையும் காணப்படுகிறது.

தவறான பரிசோதனைகள் என்றோ, இதனால் அவர்கள் இலாபமடைகிறார்கள் என்றோ உறவினர்கள் சந்தேகமடைகின்றனர். சாதாரண மக்கள் மத்தியிலும் இவ்வாறான கருத்து பரவலாகவே காணப்படுகிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-12#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.