பால் விற்பனையில் ஈடுபட்டு விட்டு வீடு திரும்பிய முதியவர், வீட்டு வாசலின் முன்பாக இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி சாந்தகுணமூர்த்தி (வயது 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர் துவிச்சக்கர வண்டியில் பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவராவார். அவர் நேற்றைய தினமும் வழமைபோன்று பால் வியாபாரத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பியபோது , வீட்டு வாசலின் முன்பாக வீதியை கடக்க முற்பட்டவேளை, அராலியில் இருந்து யாழ். நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானார்.
விபத்துக்குள்ளான முதியவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
அதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM