சுபத்ரா

பாராளுமன்றத்தில் உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட  கேள்விகளுக்கு,ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு, விளக்கமளிக்கப்பட்டது. இது தற்போதைய அரச நிர்வாகம் பாராளுமன்றத்தைப் பொருட்டாக கருதாத அளவுக்கு இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதை காட்டுகிறது.

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்ட, அவசரகால ஒழுங்குமுறைகள் தொடர்பான பிரகடனத்துக்கு,பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்திருக்கிறது.

அவசரகால ஒழுங்குமுறைகளுக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக அரசாங்கம் சமர்ப்பித்திருந்தபிரேரணை மீது நடத்தப்பட்ட விவாதத்தின் போது,எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகள் பலவற்றுக்கு பாராளுமன்றத்தில் உரிய பதில் கொடுக்கப்படவில்லை.

இந்த அவசரகால விதிமுறைகள் நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் என்றும், அரசாங்கம் இராணுவ நிர்வாகத்தை ஏற்படுத்த முனைவதாகவும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அதற்குப் பதிலளித்த போது, அவசரகாலச் சட்டத்தை மட்டுமல்ல, எந்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த தயாராக இருக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

போருக்குப் பயன்படாத வாள் எதற்கு என அவர் எழுப்பிய கேள்வி, எந்த எல்லைக்கும் செல்வதற்கு, அரசாங்கம் தயாராக இருக்கிறது என்பதையே உணர்த்தியது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இவ்வாறான அணுகுமுறையைத்தான், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் உள்ளவர்கள் வெளிப்படுத்தியிருந்தார்கள்.

போரை முடித்து வைப்பதற்காக எதையும் செய்வோம், என்றளவில் தான் அரசாங்கத்தினதும் அதன் கருவிகளாக இருந்த கட்டமைப்புகளினதும்செயற்பாடுகள் அமைந்திருந்தன.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-12#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.