எம்.எஸ்.தீன் 

முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டுமென்பதில் காலத்திற்குகாலம் பௌத்த இனவாதிகள் முயற்சிகளை எடுத்துள்ளார்கள். 

நாட்டில் முக்குவர் சட்டம், கண்டிய சட்டம், தேசவழமைச் சட்டம் என்றவாறுஇனங்கள் சார்ந்து தனியார் சட்டங்கள் உள்ள போதிலும், முஸ்லிம் தனியார் சட்டத்தை மாத்திரம்இல்லாமல் செய்ய வேண்டுமென்று முன்வைக்கப்படும் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாயில்லை.

இலங்கையின் அரசியல் யாப்பின் பிரகாரம் நாட்டுப் பிரஜை ஒருவர் தாம் விரும்பும்மதத்தையும், அதன் கலாசாரங்களையும் பின்பற்றி நடக்கவும், அதற்கு அமைய தமது வாழ்வு முறையைஅமைத்துக் கொள்வதற்கும் உரிமையுண்டு.

 

ஆதலால், முஸ்லிம் தனியார் சட்டமும் இதன் அடிப்படையில் அரசியல் யாப்புக்குஉட்பட வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற்படி தனியார் சட்டங்கள் யாவும் அந்நியரின்ஆட்சிக்காலம் முதல் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, காதி நீதிமன்ற முறையை இல்லாமல் செய்வதற்கும், முஸ்லிம் விவாகமற்றும் விவகாரத்து சட்டத்தில் சில பிரிவுகளை இல்லாமல் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம்வழங்கியுள்ளது.

அரசாங்கத்தின் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கைக்கு அமைவாக எல்லோருக்கும்ஒரே சட்டம் என்பது அமுல்படுத்தப்படவுள்ளது. காதிநீதிமன்ற நடவடிக்கைகளில் குறைபாடுகள்உள்ளன. 

பொருத்தமற்றவர்கள் காதிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.இத்தகைய குறைபாடுகளை இல்லாமல் செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காது, காதிநீதிமன்றங்களைமுற்றாக இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட இருப்பது முறையான நடவடிக்கையாகஅமையவில்லை.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-12#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.