(எம்.மனோசித்ரா)
கொவிட் தொற்றுக்குள்ளாகி தீவிர நிலைமையை அடைந்து பின்னர் குணமடைந்தவர்களில் 10 - 15 சதவீதமானோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படக்கூடும்.
எனினும் இதனை உரிய மருத்துவ ஆலோசனைகளுடன் தொடர்ச்சியாக மருந்துகளை உற்கொள்வதன் மூலம் குணப்படுத்த முடியும் என்று ஹோமாகம மற்றும் அவிசாவளை வைத்தியசாலைகளில் சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் துஷார கலபட தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட தொற்றாளர்கள் இரு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றனர்.
இவர்களில் ஒரு தரப்பினர் தீவிர நிலைமையை அடையக் கூடியவர்களாகவும், ஏனையோர் அறிகுறிகள் அற்ற வீடுகளிலேயே சிகிச்சைப்பெறக்கூடிய நிலைமையிலும் உள்ளவர்களாவர்.
இந்த இரு தரப்பினர்களும் தீவிர நிலைமையை அடைந்து பின்னர் குணமடைந்தவர்களில் 10 - 15 வீதமானோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.
அத்தோடு மேலும் சிலருக்கு சுவாசிப்பதில் சிக்கல், உடற் சோர்வு, பலமின்மை , இருமள், சுவை தெரியாமை உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படக் கூடும்.
குறிப்பிட்ட சிலருக்கு மன உளைச்சல் கூட ஏற்படக் கூடும். எவ்வாறிருப்பிம் இவ்வாறான சிக்கல்கள் ஏற்படுபவர்கள் வீண் அச்சம் கொள்ளத்தேவையில்லை. இவற்றை உரிய மருத்துவ ஆலோசனைகளின் மூலம் தொடர்ச்சியாக மருந்துகளை உட்கொண்டு குணப்படுத்த முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM