அமெரிக்க இராணுவ விமானங்களில் ஊஞ்சல் கட்டி விளையாடும் தலிபான்கள் : மகிழ்ச்சியில் சீனா 

Published By: Digital Desk 2

13 Sep, 2021 | 04:54 PM
image

குமார் சுகுணா

ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், அமெரிக்க இராணுவத்தினர் விட்டுச் சென்ற பழைய விமானங்கள் மற்றும் இதர இராணுவ தளவாடங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.  

இந்நிலையில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஒரு பழைய விமானத்தின் இறக்கை ஒன்றின் விளிம்பில் ஊஞ்சல் ஒன்றை கட்டி, தலிபான்கள் ஊஞ்சல் விளையாடும் காட்சிகளை லிஜன் ஸாவோ என்ற சீன அரசு அதிகாரி ட்விட்டரில் வெளியிட்டு கிண்டல் செய்துள்ளார்.

 

அமெரிக்க  இராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதை அடுத்து  ஆப்கானிஸ்தான் கடந்த 15 ஆம் திகதி தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

தலிபான்களுக்கு சீனா தனது நேரடி ஆதரவை ஏற்கனவே தெரிவித்து விட்டது. இனி ஆப்கான் இஸ்லாமிய ஆப்கான் அமீரகம்  சுதந்திர நாடு என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஆப்கானிஸ்தானில்  புதிய அமைச்சரவை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த விழா ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்கா விட்டு சென்ற விமானத்தின் இறக்கையில் கயிறு கட்டி ஊஞ்சல் விளையாடி வரும் காணொளி வைரலாகி வருகிறது.

1980களில் அமெரிக்காவுக்கும் அப்போதைய சோவியத் ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்தது. இந்த பனிப்போரில் குளிர்காய நினைத்த அமெரிக்கா சோவியத்துக்கு எதிரான முஜாஹிதீன் படைக்குள் சில பிரச்சினைகளை உண்டாக்கியது. அதிலிருந்து விலகிய சில உறுப்பினர்களுடன் 1994இல் தலிபான் படைகள் உருவாகின. 1996இல் அதன் கை மேலோங்கியது. நாட்டில் தீவிரமாக இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை விதித்தது தலிபான் படைகள். மேலும் மத சிறுபான்மையினர் கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளாகினர்.

2001 செப்டம்பர் 11இல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது. அதன்பின்னர் தலிபான் படைகளுக்கு அமெரிக்கா கடும் நெருக்கடி கொடுத்தது. அமெரிக்கப் படைகளை சமாளிக்க முடியாமல் அதன் அப்போதைய தலைவர் முல்லா முகமது ஒமர் தலைமறைவானார். 2013 ஆம் ஆண்டுவரை முல்லாவின் நிலவரம் என்னவென்பது மிகப்பெரிய ரகசியமாக பாதுகாக்கப்பட்டது. 2015இல் முல்லாவின் மரணத்தை அவரது மகன் உறுதி செய்தார்.

இப்போது  அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக ஆக்கிரமித்துவிட்டனர்.  அந்தப் படையில் ஹைபத்துல்லா அகுன்சதா, முல்லா முகமது யாகூப், சிராஜுதீன் ஹக்கானி, முல்லா அப்துல் கானி பரதார், ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய், அப்துல் ஹகீம் ஹக்கானி ஆகிய 6 பேரும் மிக முக்கியப் புள்ளிகளாகக் கருதப்படுகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி பைடன் ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறும் எனக் கூறியிருந்தார். அதன்படி ஆகஸ்ட் 31 ஆம் திகதி அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறிவிட்டன. வெளியேறுவதற்கு முன்னதாக, காபூல் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தங்களுக்குச் சொந்தமான விமானங்கள், ஆயுதம் தாங்கிய வாகனங்கள், ஏவுகணை அழிப்பு அமைப்புகள் என மொத்தம் 73 வாகனங்களை அமெரிக்கப் படைகள் இனி பயன்படுத்தவே முடியாதபடி செயலிழக்கச் செய்துவிட்டே கிளம்பியது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில்   அமெரிக்க இராணுவம் விட்டுவிட்டு வந்த இராணுவத் தளவாடங்களை தலிபான்கள் சேதப்படுத்தி வருகின்றனர். விமானங்களை இவர்கள் விளையாட்டு பொருட்களாக மாற்றி அதன் இறக்கையின் முனையில் கயிறு கட்டி ஊஞ்சல் விளையாடி வருகிறார்கள். அமெரிக்க இராணுவ விமானம் ஒன்றை தலிபான்கள் பொம்மை போல் பாவித்து விளையாடும்  காட்சி ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லிஜியான் ஜாவோ. அந்த டுவிட்டில் அவர், பேரரசர்களின் மயானங்களும் அவர்களின் இராணுவ தளவாடங்களும்.

தலிபான்கள் அமெரிக்க இராணுவ விமானங்களை ஊஞ்சலாக, பொம்மைகளாக மாற்றிவிட்டனர் என்று பதிவிட்டுள்ளார். பல நூற்றாண்டுகளாக, மாபெரும் சாம்ராஜ்ஜியங்கள் மற்றும் அவற்றின் ஆயுதங்களின் சுடுகாடாக ஆப்கானிஸ்தான் விளங்குவதாகவும், தலிபான்கள் அமெரிக்கர்களின் விமானங்களை விளையாட்டுப் பொருட்களாக மாற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  சீனா தங்களின் மிக முக்கிய கூட்டாளி நாடு என்று தலிபான்கள் சமீபத்தில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இடைக்கால அரசு ஒன்றை தலிபான்கள் அமைத்த பின், ஆப்கானிஸ்தானிற்கு சீனா 3.1 கோடி டொலர்கள் நிதி உதவி அளிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறியதிலிருந்தே தொடர்ந்து அமெரிக்காவை சீனா கிண்டலடித்து வருகிறது. ஏற்கனவே  தலிபான்கள் கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் உள்ள ஷேர்பெர்கானில் பேகாவில் உள்ள போக்தி பொழுதுப்போக்கு பூங்காவுக்குள் சென்று,  அங்கு குழந்தைகள் விளையாடும் டேஷிங் கார்களை விளையாடி மகிழ்ந்தனர். பின்னர் ரங்க ராட்டினத்திலும் உள்ள குதிரை மீது அமர்ந்து சுற்றினர். இதையடுத்து அவர் ஜம்பிங் டிராம்புகளிலும் ஏறி நின்று குதித்து விளையாடினர். 

இதையடுத்து ஒரு உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்ற அவர்கள் துள்ளி குதித்து விளையாடினர். ஆட்சியை பிடித்துவிட்டோம், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை பற்றி யோசிக்காமல் இவர்கள் விளையாடியது அதிர்ச்சியையும் சிரிப்பையும் ஏற்படுத்தியது. இவ்வாறு ஆசையாக விளையாடிய பூங்காவை கடைசியில் நெருப்பை வைத்து எரித்துவிட்டனர்.அங்கு வைக்கப்பட்டுள்ள சிலைகள், உருவங்கள் ஆகியவை ஹரியத் நடைமுறைக்கு எதிரானது என்பதால் அவர்கள் தீ வைத்து கொளுத்தியதாகவும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது இவர்கள் ஆட்சி அமைக்க பிரதமரை தேர்வு செய்துவிட்டார்கள். 

அமைச்சரவை பட்டியலும் வெளியாகிவிட்டது என தெரிவிக்கபட்ட நிலையில் அமெரிக்க போர் விமானங்களை பொம்மை போல மாற்றி விளையாடியுள்ளனர். இதற்கு சீனா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதை நாம் சாதாரணமாக பார்க்க முடியாது. ஏன் எனில் உலக வல்லரசாகும் கனவில் இரக்கும் சினிமா ஆசியா கண்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் தனத பட்டு பாதை திட்டத்தையும் மறைமுகமாக அமுல்படுத்தி வருகின்றது. இதற்கு பல நாடுகள் இரையாகிவிட்ட நிலையில் தற்போது ஆப்கானையும் தங்கள் அருகில் வலைத்து வைக்க திட்டமிடுகிறது. இதன் காரணமாகவே அமெரிக்காவை ஏளனமாக கிண்டல் செய்து தலிபான்களின் தலைமை வருடி விடுகிறது சீனா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13