பின்னவல யானைகள் சரணாலயத்திற்கு புதிய வருகை

Published By: Vishnu

13 Sep, 2021 | 01:24 PM
image

பின்னவல யானைகள் சரணாலயத்தில் கடந்த வெள்ளியன்று யானைக் குட்டியொன்று பிறந்துள்ளது.

38 வயதான ரஜினி என்ற பெண் யானைக்கும், 17 வயதான பாண்டு என்ற ஆண் யானைக்குமே இந்த குட்டி பிறந்துள்ளது.

ரஜினி யானை கடந்த 1995 ஆம் ஆண்டு அனுராதபுரம் - மதவாச்சி சரணாலயத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அதேநேரம் பாண்டு என்ற யானை 2004 ஆம் ஆண்டு வவுனியா, செட்டிக்குளம் பகுதியிலிருந்து மதவாச்சி சரணாலயத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந் நிலையில் பிறந்துள்ள யானைக் குட்டிக்கு இன்னும் பெயரிடப்படவில்லை, ஆனால் அது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக சரணாலய அதிகாரிகள் கூறுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்