சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் உபவேந்தரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.

முதலாம் வருட மாணவர்களை பகிடிவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் வகுப்புத் தடைக்கு உள்ளான மாணவர்களுக்கு வகுப்புத் தடையினை நீக்கக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சப்ரகமுவ பல்கலைக்கத்தினுள் மாணவ நலன் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக மாணவ சங்க அமைப்பு தெரிவித்துள்ளது.