தமிழ்த் தேசியக் கட்சிகளின் சீத்துவக்கேடு

By Digital Desk 2

13 Sep, 2021 | 12:49 PM
image

ஆர்.ராம்

“தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள தரப்புக்களிடத்தில்உருப்பெற்றிருக்கும் உள்ளகப் பனிப்போர்கள் ஊடகங்களால் இட்டுக்கட்டப்பட்டவை என்று கூறித்தற்போதைக்கு பூசிமெழுகப்பட்டாலும் ஐ.நா.கடித விவகாரத்தில் மட்டுமே பதிலளிக்கப்படாதநிலையில் பல்வேறு வினாக்கள் இன்னுமுள்ளன” 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர்இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல்பச்லெட் அம்மையார் வாய்மூலமான அறிக்கையொன்றை முன்வைக்கவுள்ளார்.

அந்த அறிக்கையில் ‘இலங்கையில் நல்லிணக்கம் மற்றும்பொறுப்புக்கூறலை ஊக்குவித்தல்’ எனும் தலைப்பில் நிறைவேற்றப்பட்ட 46ஃ1தீர்மானத்தின்பின்னர் உள்நாட்டில் காணப்படும் முன்னேற்றங்கள் பற்றிய விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளன.இதற்கு அப்பால் இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை பற்றிய விடயங்கள் எதுவும் இடம்பெறப்போவதில்லை.

இவ்வாறிருக்க, தமிழ்த் தேசிய அரசியல் தளத்திலிருந்துஜெனிவா நோக்கி கூட்டாகவும், தனியாகவும் அரசியல் கட்சிகள் மக்கள் பிரதிநிதிகளால் கடிதங்கள்அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இது வழமையாக உள்ளுர் அரசியலுக்காக இடம்பெறுகின்ற விடயமாகஇருக்கின்றபோதும் இம்முறை அரசியல் கட்சிகளின் ஏட்டிக்குப் போட்டியான செயற்பாடுகள் சந்திசிரிக்கவைத்துவிட்டன. 

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தனியாகவும், விக்னேஸ்வரன்,செல்வம், சுரேஷ், சித்தார்த்தன் சிறிகாந்தா ஒரு அணியாகவும், கஜேந்திரகுமார் அணியினர்தனியாகவும், தமிழரசுக்கட்சியின் இந்நாள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்சிலரை உள்ளடக்கிய குழுவினர் ஒரு அணியாகவும், அனந்தி, சிவாஜிலிங்கம் தரப்பினர் பிறிதொருஅணியாகவும் கடிதங்களை அனுப்பியுள்ளனர். 

இதனைவிடவும், விக்னேஸ்வரன், சிறிதரன் உள்ளிட்ட பாராளுமன்றஉறுப்பினர்கள் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்திட்டம் போன்ற அமைப்புக்களுடன்இணைந்து, அவசரகால நிலைமை, பயங்கரவாத சட்டம், காணி அபகரிப்பு போன்ற தமிழர்கள் முகங்கொடுக்கும்விடயப்பரப்புக்களில் ஒவ்வொன்றை மையப்படுத்திய கடிதங்கள் ஆவணங்களையும் அனுப்பியுள்ளார்கள். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2021-09-13#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right