நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 72,177 நபர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அவற்றில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ் 790 நபர்களுக்கும் அதன் இர்ணடாவது டோஸ் 451 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சினாபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 24,324 நபர்களுக்கும் அதன் இர்ணடாவது டோஸ் 32,866 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் 12,341 நபர்களுக்கும் அதன் இர்ணடாவது டோஸ் 104 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 1,301 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 10,579,220 நபர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளதுடன், மொத்தமாக 24,077,046 தடுப்பூசி டோஸ்கள் நிர்வாகிப்புகள் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை நாடு முழுவதும் இன்று 234 கொவிட்-19 தடுப்பூசி நிலையங்கள் செயற்பாட்டில் உள்ளன.

13.09.2021 செயலில் உள்ள தடுப்பூசி நிலையங்கள்