விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கப்­படும் உர மானியம் உட்­பட சில கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி நேற்­றைய தினம் நாட­ளா­விய ரீதியில் உள்ள விவ­சா­யிகள் கொழும்பில் பாரிய ஆர்ப்­பாட்ட பேரணி ஒன்றில் ஈடு­பட்­டனர்.

கொழும்­பு ­லிப்டன் சுற்­று­வட்­டத்­திற்கு முன்­பாக நாட­ளா­விய ரீதியில் இருந்து வரு­கை ­தந்­தி­ருந்த அனைத்து இலங்கை விவ­சாய சம்­மே­ளத்­தினை சேர்ந்த விவ­சா­யிகள் மற்றும் சங்­கத்தின் பிர­தி­நி­திகள் ஒன்று சேர்ந்தே இந்த ஆர்ப்­பாட்ட பேர­ணி­யினை முன்­னெ­டுத்­தனர். குறித்த இடத்தில் ஆரம்­பிக்­கப்­பட்ட பேர­ணி­யா­னது விகா­ரமா தேவி பூங்கா வீதிஇ மற்றும் தேசிய நூல­கத்­திற்கு அரு­கா­மையில் உள்ள வீதியின் ஊடாக அல­ரி­மா­ளி­கையை நோக்கி செல்ல முற்­பட்ட வேளை அங்கு பாது­காப்பு கட­மைக்­காக பெரு­ம­ள­வி­லான பொலிஸார் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­தோடு பாது­காப்பு வேலிகள் அமைத்­துடன் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாக­னங்­களும் நிறுத்­தி­ வைக்­கப்­பட்டி­ருந்­தன.

பேர­ணி­யினை முன்­னெ­டுத்த ஆர்ப்­பாட்டக்காரர்கள் அரசே எமக்­கான உர மானி­யத்­தினை வழங்­கிடுஇ விவ­சா­யி­களை ஏமாற்றி எமது சாபத்­திற்கு உள்­ளா­காதேஇ நெல்­லுக்­கான நிலை­யான விலை­யினை உறு­திப்­ப­டுத்துஇ விவ­சா­யி­க­ளுக்­கான பிரச்­சி­னைக்கு தீர்வை பெற்­றுத்தா போன்ற கோஷங்­களை எழுப்­பி­ய­வாறும் பதா­கை­களை ஏந்­தி­ய­வாறும் ஆர்ப்­பாட்­டத்தை முன்­னெ­டுத்து சென்­றனர்.

இத­னி­டையே அல­ரி­மா­ளி­கை­யினை நோக்கி ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் செல்ல முற்­பட்ட போது அங்கு பாது­காப்பில் ஈடு­பட்­டி­ருந்த பொலி­ஸா­ருக்கும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்­கி­டையே முறுகல் நிலை ஏற்­பட்­ட­தோடு குறித்த பிர­தே­சத்தில் பதற்ற நிலை­யொன்று காணப்­பட்­டது. ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட விவ­சா­யிகள் அவர்­க­ளது பிரச்­சி­னைகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்பு ஒன்றை பெற்­றுத்­த­ரு­மாறு வேண்­டினர். இவ்­வா­றான நிலையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாரா­ளு­மன்­றத்தில் வரவு செலவு திட்டம் தொடர்­பி­லான வாதப்­பி­ர­தி­வா­தங்­களில் கலந்து கொண்­டி­ருப்­ப­தனால் பிர­த­மரின் செய­லா­ள­ருடன் பேச்­சு­வார்த்­தையை முன்­னெ­டுக்­கு­மாறு பொலிஸார் கேட்டு கொண்­டனர். இருந்த போதும் இதற்கு விவ­சா­யி­க­ளினால் மறுப்பு தெரி­விக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து விவ­சா­யிகள் கோஷங்­களை எழுப்­பி­ய­வாறு அல­ரி­மா­ளி­கையின் முன்னால் ஆர்ப்­பாட்­டத்தை தொடர்ந்­தனர்.

இதன் போது ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்த அகில இலங்கை விவ­சாய சம்­மே­ளனத் தலைவர் நிமால் குல­சே­கர,

எமது நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு முது­கெ­லும்­பாக எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் செயற்­படும் நாட­ளா­விய ரீதியில் உள்ள விவ­சா­யிகள் தமது ஜீவ­னோ­பாய தொழிலை முன்­னெ­டுப்­பதில் காலங்­கா­ல­மாக பல்­வேறு ரீதி­யான பிரச்­சி­னை­களை முன்­னெ­டுக்­கின்­றனர். அந்­த­வ­கையில் தேசிய அர­சாங்­கத்­தினால் பாரா­ளு­மன்­றத்தில் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள 2016 ஆம் ஆண்டு வரவு செலவு திட்­டத்தில் விவ­சா­யி­க­ளுக்­கான உர மானியம் நீக்­கப்­பட்­டுள்­ளது. நெல்­லுக்­கான நிரந்­தர விலை­களில் மாற்றம் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு விவ­சா­யி­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் பல்­வேறு செயற்­றிட்­டங்கள் நல்­லாட்­சி­யினால் ஸ்தாபிக்­கப்­பட்ட தேசிய அர­சாங்­கத்தின் வரவு செலவு திட்­டத்தில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த அர­சாங்கம் ஒன்றை நன்­றாக புரிந்து கொள்ள வேண்டும். அதா­வது விவ­சா­யி­க­ளுக்கு பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்தி ஆட்­சி­யினை முன்­னெ­டுக்க முடி­யாது. அர­சாங்­கத்­திற்கு நாம் சவால் ஒன்­றினை விடுக்­கின்றோம். அதா­வது பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள வரவு செலவு திட்­டத்தில் விவ­சா­யி­க­ளுக்கு நன்மை பயக்கும் ஒரு விட­யத்தை ஏதேனும் ஒரு விவ­சாய சங்­கத்­தினால் ஊடக வாயி­லாக குறிப்­பிட வைக்க முடி­யுமா? அவ்­வாறு முடி­யு­மானால் அந்த சவாலை நாம் ஏற்­றுக்­கொள்­கின்றோம்.

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி நாம்பலமுறை அரசாங்கத்திடம் எம­து கோரிக்கைகளை முன்வைத்த போதும் எமக்கான தீர்வு இதுவரை முன்வைக்கப்படவில்லை. இவ்வாறான நிலையிலேயே இந்த போராட் டத்தை முன்னெடுத்தோம். தொடர்ந்தும் எமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கமானது அசமந்த போக்கினை கடைப் பிடிக்குமாயின் அரசாங்கமானது பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச் சரித்தார்.