ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை எல் -410 என்ற  விமானம்  தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதோடு, ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்தபோது இரண்டு ஊழியர்கள் மற்றும் 14 பயணிகள் விமானத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணியில் ஈடுப்படுவதோடு, காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகேயுள்ள உள்ளூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.