வடகொரியா வார இறுதி நாட்களில் நீண்ட தூரம் பணிக்கக் கூடிய ஒரு புதிய வகை  ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளதாக கொரிய மத்திய செய்தி நிறுவனத்தை (KCNA) மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

Image

அமெரிக்காவுடன் நிறுத்தப்பட்ட அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் நாடு தனது இராணுவத் திறனை விரிவுபடுத்தி வரும் நிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

'குரூஸ்' என பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை அதன் இலக்கை எட்டுவதற்கு முன்பு சுமார் 1,500 கிலோமீட்டர் (930 மைல்) தூரம் பறந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

குரூஸ் ஏவுகணையின் சோதனை "நமது அரசின் பாதுகாப்பை மிகவும் நம்பகத்தன்மையுடன் உறுதிப்படுத்துவதற்கும், எதிரிப் படைகளின் இராணுவ சூழ்ச்சிகளை வலுவாகக் கொண்டிருப்பதற்கும் மற்றொரு பயனுள்ள தடுப்பு வழிமுறைகளை வைத்திருப்பதற்கான மூலோபாய முக்கியத்துவத்தை வழங்குகிறது" என்று கொரிய மத்திய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

எனினும் இந்த சோதனை வட கொரியாவின் "இராணுவத் திட்டத்தை வளர்ப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துவது மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஏற்படும் அச்சுறுத்தல்களை வெளிக் காட்டுகிறது" என்று அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க, தென் கொரியா மற்றும் ஜப்பானின் உயர் மட்ட அதிகாரிகள் இந்த வாரம் வடகொரியாவின் அணுவாயுதமயமாக்கல் செயல்முறை பற்றி விவாதிக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.