டெல்டா பரவல் குறையவில்லை : மீண்டும் வேகமாக பரவும் அச்சுறுத்தல் - சந்திம ஜீவந்தர 

12 Sep, 2021 | 09:36 PM
image

(ஆர்.யசி)

நாட்டில் கொவிட் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு நிலையொன்று காணப்படுகின்ற போதிலும் டெல்டா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலை குறையவில்லை எனவும், தற்போதும் அடையாளம் காணப்படும் வைரஸ் தொற்றாளர்கள் டெல்டா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதால் மீண்டும் வேகமாக டெல்டா வைரஸ் பரவக்கூடிய அச்சுறுத்தல் நிலை இருப்பதாகவும் ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின்  பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர ஆகியோரின் ஆய்வில் வெளிப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் டெல்டா திரிபானது புதிய திரிபாக மாற்றடைந்து வேகமாக பரவுகின்றது -  ஆய்வில் புதிய தகவல் | Virakesari.lk

கடந்த சில தினங்களாக நாட்டில் கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதுடன், கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது, இந்நிலையில் வைரஸ் பரவல் நிலைமைகள் குறித்து வினவிய போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

டெல்டா வைரஸ்  நாட்டில் வேகமாக பரவிக்கொண்டுள்ளது, இறுதியாக நாம் முன்வைத்த ஆய்வறிக்கையில் கூட  தொற்றாளர்களில் 95.8 வீதமானோர் புதிய டெல்டா வைரஸ் தொற்று தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்பதை வெளிப்படுத்தியிருந்தோம்.  

ஏப்ரல் மாதமளவில் இலங்கையில் டெல்டா வைரஸ் பரவல் கண்டறியப்பட்ட பின்னர் அன்று தொடக்கம் நாளாந்தம் டெல்டா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் நாடு மீண்டும் நீண்ட முடக்கத்திற்கு சென்றுள்ள நிலையில் நிலைமைகளை கட்டுப்படுத்த இது சாதகாமகவே உள்ளது. அதில் மாற்றுக்கருத்து இல்லை. 

ஆனால் குறித்த ஒரு மாதகாலத்தில் கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என்பதற்காகவோ அல்லது கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் குறைவை காட்டுகின்றது என்பதற்காகவோ நாடு பாதுகாப்பான நிலையில் உள்ளதென கருதுவது தவறானதாகும். இன்னமும் நாட்டில் டெல்டா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலையே காணப்படுகின்றது.

அதேபோல் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கும் வரையில் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமையே இருக்கும்.

டெல்டா வைரஸ் வேகமாக பரவும் தன்மையை கொண்டுள்ள காரணத்தினால் நாம் வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக விடுபடுவது சவாலான விடயமே.

எனவே மக்கள் இப்போது மட்டுமல்ல தொடர்ச்சியாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தமது மற்றும் அயலவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்., 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; புத்தளத்திற்கு...

2025-03-27 12:56:16
news-image

கோடாவுடன் சந்தேகநபர் கைது !

2025-03-27 12:54:48
news-image

கிரிஷ் கட்டிட வழக்கு விசாரணைகளிலிருந்து மற்றுமொரு...

2025-03-27 12:21:18
news-image

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில்...

2025-03-27 12:39:27
news-image

விமான எதிர்ப்பு தோட்டாக்களுடன் இராணுவ வீரர்...

2025-03-27 11:37:26
news-image

கற்களை ஏற்றிச் சென்ற பாரஊர்தி விபத்து

2025-03-27 12:02:05
news-image

கடற்சார் பொருளாதாரம் ஊடாக நாட்டுக்கு நன்மைகளை...

2025-03-27 11:54:43
news-image

தேயிலை ஏற்றுமதியில் இலங்கையை பின்னுக்கு தள்ளி...

2025-03-27 13:01:21
news-image

பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் திடீரென...

2025-03-27 11:26:19
news-image

மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு...

2025-03-27 11:23:40
news-image

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக குருணாகலுக்கு பீடி...

2025-03-27 11:23:14
news-image

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகள் தாய்நாட்டில்...

2025-03-27 11:03:55