நடிகை திரிஷா 2 வேடங்களில் நடித்திருக்கும் நாயகி படம் இந்த வெள்ளியன்று வெளியாகவிருக்கிறது. இப்படம் தெலுங்கில் வெளியாகி தோல்வியை சந்தித்திருந்தாலும் சில மாற்றங்களோடு தமிழில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் நடிகை திரிஷா யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு படத்தில் 5 வேடங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் இளவரசன் இயக்கவிருக்கும் பெயரிடப்படாத அந்த படத்தில் நாசரும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க விருக்கிறார்.

திரிஷா ஏற்கவிருக்கும் அந்த 5 கேரக்டரில் ஒரு கேரக்டர் ஹோட்டல் அதிபராம். மற்றொரு கேரக்டரில் நடிப்பதற்காக உடலை மேலும் இளைக்க வைக்கவிருக்கிறாராம். அதற்காக மட்டும் ஒரு கோடி ரூபாயை ஊதியமாக பெற்றிருக்கிறாராம். அத்துடன் அந்த ஒரு கேரக்டருக்கான ஆடை வடிவமைப்பிற்காகவும், உடைக்காகவும் இலட்சக்கணக்கில் செலவு செய்யவிருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

இப்படம் வெற்றியடைந்தால் திரிஷா உண்மையிலேயே நடிகையருள் நாயகியாக மின்னுவார் என்பது உறுதி.

தகவல் : சென்னை அலுவலகம்