ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றுவரும் அமைதியான போராட்டங்கள் மற்றும் அணிவகுப்புகள் மீது தலிபான்களின் தாக்குதல்கள் கடுமையாக காணப்படுவதுடன் வன்முறையாக உள்ளதாக ஐ.நா பேச்சாளர் ரவினா ஷம்தசானி தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டவர்களை வீடு வீடாகத் தேடிச் சென்று தாக்கியமை மற்றும் அச்சுறுத்தியமை உள்ளிட்ட  உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் ஊடகவியலாளர்களும் மிரட்டலை எதிர்கொண்டுள்ளனர். செய்தி சேகரிக்கப்படும்போது தலிபான்களால் அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.