விசேட ஜெனிவா களம் ! 48 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பம் : அழுத்தங்களை எதிர்கொள்ளுமா இலங்கை !

Published By: Priyatharshan

15 Sep, 2021 | 07:29 AM
image

இலங்கை குறித்து ஐ.நா. ஆணையாளர் மிச்செல் பச்லேட் கடுமையாக சாடியது என்ன ? - முழு அறிக்கை விபரம் !

இலங்கையில் அடிப்படை உரிமைகள், சிவில் செயற்பாடுகளுக்கான இடைவெளி, ஜனநாயகக்கட்டமைப்புக்கள், நிலைபேறான அபிவிருத்தி ஆகிய விடயங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் வலுவிழந்துள்ளமையினையும் அவதானிக்கமுடிவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லேட் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/113262

வெளிக்கள பொறிமுறையை ஒருபோதும் அனுமதியோம் : ஜெனீவா அறிவிப்புக்களுக்கு இலங்கை பதில் 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்தின் ஊடாக நிறுவப்படக்கூடிய எந்தவொரு வெளியகப்பொறிமுறை தொடர்பான முன்மொழிவுகளையும் முழுமையாக நிராகரிப்பதாகவும் அவற்றுக்குப் பதிலாக உள்ளகப்பொறிமுறையின் ஊடாக அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிவித்திருக்கின்றார்.

https://www.virakesari.lk/article/113316

------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் கவலையளிக்கின்றது  - பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள்

இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யக் கூடியவகையில் வரையறுக்கப்பட்ட அளவிலான நடவடிக்கைகள் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டிருந்த 2008 - 2009 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் 11 இளைஞர்கள் காணாமலாக்கப்பட்டமை உள்ளிட்ட சில முக்கிய வழக்குகள் தற்போது மேலும் பின்னடைவைச் சந்தித்துள்ளமை பெரிதும் விசனமளிக்கின்றது. 

https://www.virakesari.lk/article/113331

---------------------------------------------------------------------------------------------------------------------

விடுதலை புலிகளால் முன்னெடுக்கப்பட்ட மீறல்கள் குறித்து ஏன் ஐ.நா. அவதானம் செலுத்தவில்லை - வாசுதேவ

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்கள் நடுநிலையான தன்மையில் காணப்பட வேண்டும்.   விடுதலை புலிகள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஏன்  அவதானம் செலுத்தவில்லை. என  நீர்வழங்கல்துறை அமைச்சர்  வாசுதேவ நாணயக்கார கேள்வியெழுப்பினார்.

https://www.virakesari.lk/article/113333

-------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐ.நா.வின் கண்காணிப்புக்களை இலங்கை புறக்கணிக்கவில்லை - அரசாங்கம் அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக காணப்படுகின்ற நிலையில், இலங்கை தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற கண்காணிப்புக்களை நாம் புறக்கணிக்கவில்லை. 

ஆனால் எந்தவொரு விடயத்திலும் அநாவசிய இராணுவ தலையீடு இல்லை என்பதில் உறுதியாகவுள்ளோம் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/113315

---------------------------------------------------------------------------------------------------------------------------

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை ; தமிழ் அரசியல் தலைமைகள் வரவேற்பு

இலங்கை அரசை சர்வதேச பொறிக்குள் சிக்கவைத்து கடுமையான அழுத்தங்களை பிரயோகித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல அறிக்கையை வரவேற்பதாக தமிழ் அரசியல் தலைமைகள் தெரிவித்துள்ளதுடன், ஆணையாளரின் அறிக்கை முன்னேற்றகரமான நகர்வாக உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

https://www.virakesari.lk/article/113314

-----------------------------------------------------------------------------------------------------------------------

ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் மலையக தமிழர் பிரச்சினைகளை முன்வைக்க உத்தேசம் - மனோ

எதிர்வரும் ஆண்டில் இந்நாட்டில் வாழும் மலையக தமிழர்கள் எதிர்நோக்கும் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார உரிமை மீறல்களையும், ஐநா மனித உரிமையக அவதானத்துக்கு முன்வைக்க நாம் உத்தேசித்துள்ளோம் என ஜனநாயக மக்கள் முன்னணி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/113297

-----------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளரின்  கரிசனைகளை ஏற்கிறோம் - பிரித்தானியா

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கரிசனைகளை ஏற்பதாகத் தெரிவித்திருக்கும் பிரிட்டன், இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அழுத்தங்களைச் தொடர்ச்சியாக வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/113261

-----------------------------------------------------------------------------------------------------------------------

ஐ.நா.வின் செயற்பாடுகள் நம்பிக்கை தரக் கூடியதாக இல்லை : வெளிவிவகார அமைச்சர் இத்தாலியில் தெரிவிப்பு

ஐ.நா மனித உரிமை பேரவையின் கோட்பாடுகள் இன்று பின்பற்றப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகள் நம்பிக்கை தர கூடியதாக இல்லை என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், உலகத்தில் ஒரு பகுதிக்காக அல்ல அனைத்துலக நாடுகளுக்குமானதாக இந்த அமைப்பு அமைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/113260

----------------------------------------------------------------------------------------------------------------------------

ஐ.நா.உயர் ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பு

இலங்கை அரசாங்கம் மனித உரிமை பேரவையோடு இணங்கிச் செயற்படும் என ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதியை செயலில் காண வேண்டும் என  மனித உரிமை உயர் ஸ்தானிகரின் வலியுறுத்தியள்ளதை கவனத்தில் கொண்டுள்ளதாக தெரிவிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் வெளியிடப்பட்ட மனித உரிமை உயர் ஸ்தானிகரின் இலங்கை சம்பந்தமான வாய்மூல முன்னேற்ற அறிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/113259

------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கை தொடர்பில் நெருக்கமாக அவதானியுங்கள் : உறுப்பு நாடுகளுக்கு ஐ.நா. ஆணையாளர் மிச்சேல் பச்லெட் வலியுறுத்தல் 

நல்லிணக்கம், பொறுப்புக்றுல் மற்றும் மனித உரிமைகளின் நம்பகமான  முன்னேற்றங்கள் குறித்து உறுப்பு நாடுகள் மிக நெருக்கமாக அவதானம் செலுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் தெரிவித்துள்ளார்.  

https://www.virakesari.lk/article/113237

-------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் செப்டெம்பர் 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி இடம்பெறுகின்றது.

No description available.

ஜெனிவாவில் ஆரம்பமாகும் இந்த கூட்டத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை நடைபெறும். அனைத்துலக நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்படவுள்ளது.

முதல் நாளான செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நிலவரம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வாய்மூல அறிக்கையை வெளியிடுவார்.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நிலவரம்  https://www.virakesari.lk/article/113136

-----------------------------------------------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------------------

ஐ. நா.மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரே மிக முக்கியமானது - சுமந்திரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆம் கூட்டத்தொடரே மிக முக்கியமானது. தற்போதைய 48 ஆவது கூட்டத்தொடர் மற்றும் 50 ஆவது கூட்டத்தொடரில் இந்த விடயம் தொடர்பாக வாய்மூல அறிக்கையை உயர்ஸ்தானிகர் சமர்பிப்பார்.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/113168

----------------------------------------------------------------------------------------------------------------------

தீர்மானங்களும் செயற்பாடுகளும் இலங்கையை தனிமைப்படுத்துவதாக அமைந்து விடக்கூடாது  - ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அரசாங்கம் விளக்கம்

பொறுப்புக்கூறலை கட்டியெழுப்புவதில் இலங்கை இதயசுத்தியுடன் செயற்படுகிறது. இந்த நிலையில் பிரச்சினைகளை  தீர்ப்பதில் உறுதியானதும்  தொடர்ச்சியானதுமான  முன்னேற்றம்  காணப்பட்ட  போதிலும் பேரவையின் செயற்பாடுகளும் தீர்மானங்களும் இலங்கையை தனிமைப்படுத்துவதாக அமைய கூடாது என ஜெனிவாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/113177

-------------------------------------------------------------------------------------------------------------------------------

நாட்டின் எதிர்காலம் பாரிய அச்சுறுத்தலுக்குள் - எதிர்க்கட்சி எச்சரிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு வழங்கிய கால அவகாசத்தை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை.  

இதனால் ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக பிரேரணைகளை நிறைவேற்றக் கூடிய வாய்ப்புக்களே அதிகமுள்ளன. இது நாட்டின் எதிர்காலத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/113159

-------------------------------------------------------------------------------------------------------------------------

ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு மேலும் இரண்டு கடிதங்கள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு பொறுப்புக்கூறலையும், நீதி நிலைநாட்டப்படுதலை உறுதிப்படுத்தக் கோரியும் மேலும் இரண்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் சார்பில் அதன் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் மற்றும் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/113138

---------------------------------------------------------------------------------------------------------------------

காலத்தை இழுத்தடிக்க அரசாங்கம் முயற்சி : தகுந்த நடவடிக்கை அவசியம் : ஐ.நா.விடம் சம்பந்தன் எடுத்துரைப்பு

இலங்கை அராங்கம் பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தினை ஏற்படுத்தல், நீதியை நிலைநாட்டில் ஆகியவற்றுக்கான எவ்விதமான நடவடிக்கைகளையும் செயற்பாட்டு ரீதியாக முன்னெடுக்காது செய்கின்றோம், செய்வோம் என்று கூறி காலத்தினை இழுத்தடிப்பதற்கு முயற்சிக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/113144

--------------------------------------------------------------------------------------------------------------

அரசாங்கத்தின் ஐ.நா.பதிலளிப்பு அறிக்கையும் உள்ளகச் செயற்படுகளும் முரணானவை - அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடரிற்கு இலங்கை அரசாங்கம் அளித்துள்ள பதிலளிப்பு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களும் உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளும் முற்றிலும் முரணானதாக உள்ளதென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்களில் ஒருவரான அம்பிகா சற்குணநாதன் பகிரங்கமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/113139

----------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கைக்கு வலுவான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையில் மிகவும் மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதுடன் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தக்கூடியவாறான வலுவான அழுத்தங்கள் இலங்கை அரசாங்கத்தின்மீது பிரயோகிக்கப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/113118

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58