(எம்.மனோசித்ரா)
தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கொவிட் கட்டுப்படுத்தலுக்கு ஒத்துழைப்பு வழங்கியதைப் போலவே பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொவிட் தொற்றின் காரணமாக நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு வெவ்வேறு வழிமுறைகளை அரசாங்கம் செயற்படுத்தி வருகிறது.
இதன்போது தேசிய பயிர் செய்கையாளர்களை ஊக்குவித்து எமக்கு தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்யும் முறைமையை பின்பற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு தொழில் முனைவோர் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.
சுங்க வரி, அந்நிய செலாவணி உள்ளிட்ட அரச வருமானங்கள் அனைத்தும் குறைவடைந்துள்ளன. அல்லது இல்லாமல் போயுள்ளன. இவ்வாறான நிலையில் கொவிட் சார்ந்த செய்பாடுகளை முன்னெடுப்பதற்கு மேலதிக செலவு அரசாங்கத்திற்கு ஏற்படுகிறது.
இவற்றுக்கு மத்தியிலேயே அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளமும், ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியமும் குறைவின்றி வழங்கப்படுகிறது.
அத்தோடு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் என்பனவும் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தேசிய உற்பத்தியாளர்களை ஊக்குவித்து பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கொவிட் கட்டுப்படுத்தலுக்கு ஒத்துழைப்பு வழங்கியதைப்போலவே பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM