காலி மாநகர சபையின் சமூக அபிவிருத்தி அதிகாரி ஒருவர் 45 கொவிட்-19 தடுப்பூசி அட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் அதிகளவான தடுப்பூசி அட்டைகளை வைத்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உளுவிடிகே, நாவின்ன பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

அவர் காலி மாநகர சபை பகுதியில் ஜூலை 28 அன்று இடம்பெற்ற கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்றார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தடுப்பூசி திட்டத்திற்குப் பிறகு அட்டைகளை ஒப்படைக்க வேண்டியிருந்த போதிலும், அவர் அட்டைகளை ஒப்படைக்காது வைத்திருந்த குற்றச்சாட்டுக்காகவே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந் நிலையில் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.