மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருணாகல் வரையான இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் முடிவடைந்து எதிர்வரும் நம்வபர் 15 ஆம் திகதிக்குள் பொது மக்களின் பாவனைக்காக ஒப்படைக்கப்படும் என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

May be an image of tree and road

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளை நேற்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னரே அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

May be an image of 5 people, people standing and people sitting

நுழைவாயில் கம்பஹா மாவட்டத்தின் மீரிகமவில் இருக்கும், வெளியேறும் இடம் குருணாகலில் இருக்கும்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

கண்டி, குருணாகல் மற்றும் தம்புள்ளைக்கு பயணம் செய்பவர்களுக்கு இந்த அதிவேக நெடுஞ்சாலை மிகவும் வசதியாக இருக்கும்.