2001 செப்டம்பர் 11 தாக்குதல்களை முன்னிட்டு சவுதி அரேபியாவினால் கடத்தல்காரர்கள் இருவருக்கு வழங்கப்பட்ட தளவாட ஆதரவு தொடர்பான புதிதாக வகைப்படுத்தப்பட்ட 16 பக்க ஆவணத்தை எஃப்.பி.ஐ. வெளியிட்டுள்ளது.

In this Tuesday, September 11, 2001 file photo, thick smoke billows into the sky from the area behind the Statue of Liberty, lower left, where the World Trade Center towers stood [File: Daniel Hulshizer/ AP]

சனிக்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட இந்த ஆவணம், கடத்தல்காரர்களுக்கு அமெரிக்காவில் உள்ள சவுதி கூட்டாளிகளுடன் இருந்த தொடர்புகளை விவரிக்கிறது.

ஆனால் சவுதி அரசு, சதிக்கு உடந்தையாக இருந்ததற்கான எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.

அமெரிக்காவிற்கு எதிரான செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சில ஆவணங்களை ஆறு மாதங்களுக்குள் வகைப்படுத்த ஒரு இடைக்கால மதிப்பாய்வைத் தொடங்குமாறு பைடன் முன்பு ஒரு நிர்வாக உத்தரவை வெளியிட்டார்.

அதற்கு அமைவாக வகைப்படுத்தப்பட்ட பல ஆவணங்களில் முதல் தொகுப்பே இவையாகும்.

நியூயோர்க், பென்சில்வேனியா மற்றும் வடக்கு வர்ஜீனியாவில் செப்டம்பர் 11 நினைவேந்தல் நிகழ்வுகளில் பைடன் கலந்து கொண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை இரவு 16 பக்கங்கள் கொண்ட இந்த ஆவணம் மத்திய புலனாய்வுப் பிரிவான எஃப்.பி.ஐ.யால் வெளியிடப்பட்டுள்ளன.

எனினும் 2001 செப்டெம்பர் 11 தாக்குதலுக்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சவுதி அரேபியா நீண்டகாலமாக மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.