அழகும் ஆரோக்கியமும் இணைந்த 'ரெஃப்ளெக்சாலஜி ' சிகிச்சை

Published By: Robert

14 Sep, 2016 | 01:23 PM
image

இன்றைய திகதியில் செல்போன்களால் அதிலும் ஆண்ட்ராய்ட் போன்களால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் அவர்கள் அடையும் மன அழுத்தம் இருக்கிறதே.. வார்த்தைகளில் வடிக்க இயலாது. எந்த பக்கத்திலிருந்து யார் எம்மை எப்படியெல்லாம் பதிவு செய்து கண்காணிக்கிறார்களோ என்ற அச்சம் பெண்களை பிடித்துள்ளது. இதன் விளைவு தேவையில்லாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். தற்போதெல்லாம் அழகை மேம்படுத்துவதற்காக அழகுநிலையங்களுக்கு செல்கிறார்களோ இல்லையோ ஆரோக்கிய மேம்பாட்டிற்காக தகுதி வாய்ந்த அழகு நிலையங்களுக்கு செல்லத் தவறுவதில்லை. இவர்களுக்காகவே தற்போது அழகு நிலையங்கள்கூட ஆரோக்கிய நிலையங்களாகவும் மாறத்தொடங்கியுள்ளன. இவர்கள் தான் முதன்முதலில் ரெஃப்ளெக்சாலஜி என்ற சிகிச்சையை அறிமுகப்படுத்துகிறார்கள்.

அது என்ன ரெஃப்ளெக்சாலஜி சிகிச்சை..!

இது அழகும் ஆரோக்கியமும் கொண்ட சிகிச்சை. மசாஜ் தான் இதில் பிரதானம் என்றாலும், பாதத்தில் உள்ள சில முக்கியமான அழுத்தப்புள்ளிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் இதயம், நுரையீரல், சிறுநீரகம் கர்ப்பப் பை, கணையம்,மூளை என முக்கிய உறுப்புகளுடன் தொடர்புடையவை. அந்த அழுத்த புள்ளிகளை தெரிந்து கொண்டு அந்த இடத்தில் மசாஜ் செய்யும் போது இரத்த ஓட்டம் சீராகும். உடல் களைப்பு நீங்கி உற்சாகம் பெறும். தூக்கமின்மை, தைெராய்ட்,சைனஸ், தலைவலி, முதுகு வலி, கை கால் வலி,மூட்டு வலி,மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் என தலை முதல் கால் வரைக்கும் உள்ள அனைத்து பிரச்சிைனக்கும் ரெஃப்ளாக்சாலஜி மூலம் தீர்வளிக்க முடியும் குறிப்பாக சொல்வதென்றால் பயணக்களைப்பை விரட்டுவதில் இந்த சிகிச்சையை ஒரு முறைமேற்கொண்டால் போதும். நீங்களே உணர்வீர்கள்.

இத்தகைய சிகிச்சையையளிக்கும் ஒரு நிபுணரின் கருத்தைக் காண்போம்.

``உடல் உறுப்புகளின் பிம்பத்தை பிரதிபலிக்கும் பாதம் மற்றும் கைகளில் உள்ள மையப் புள்ளிகளில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் குறிப்பிட்ட உறுப்புகளை இயங்கச் செய்வதே இதன் சிறப்பம்சம். இருப்பினும், இந்த சிகிச்சை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சிகிச்சையல்ல. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாய்லாந்து, சீனா, எகிப்து போன்ற கிழக்கத்திய நாடுகளில் ‘ரெஃப்ளெக்சாலஜி’ சிகிச்சை முறையை பின்பற்றி வந்திருக்கிறார்கள்.

மனித உடலானது, உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினைகளை தனக்குத்தானே சரிசெய்து கொள்ளும் அசாத்திய ஆற்றல் பெற்றது. ரெஃப்ளெக்சாலஜி சிகிச்சை முறையில் நோயை குணப்படுத்தும் ஆற்றலைத் தூண்டி உடல் மீண்டும் தன்னை மறுஉருவாக்கம் செய்து கொள்ள ஊக்குவிக்கிறது. உடல் உள்ளுறுப்புகளோடு தொடர்புடைய கால் மற்றும் கைகளில் உள்ள புள்ளிகளை தூண்டும் அறிவியல்தான் இது. இப்புள்ளிகளில் கொடுக்கப்படும் அழுத்தம் பாதிக்கப்பட்ட பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால், நோயிலிருந்து விரைவில் குணமடைய முடிகிறது. அதேநேரம், உடலின் ஒவ்வொரு உறுப்புகளினூடே ஊட்டச்சத்துகள், ஓக்சிஜன், ஹோர்மோன்கள், அன்ட்டிபாடிகள் மற்றும் கழிவுப் பொருட்கள் போக்குவரத்துக்கு ரத்த ஓட்டம் மிகவும் அவசியம். இரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது நரம்பு மண்டலப்பகுதிகளிலும், அதன் தொடர்பான உறுப்புகளிலும் இறுக்கம் குறைவதால், உடலோடு, மனம், உணர்வு மற்றும் ஆன்மாவுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது. இதனால் இளமையான தோற்றத்தை திரும்பப் பெறலாம்.

இன்று தொழில் பார்ப்பவர்கள் மட்டுமில்லை பெரும்பாலும் அனைவருமே மன அழுத்தம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். அதிகப்படியான மன அழுத்தமே, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய் வரக் காரணமாகிறது.

இவர்களுக்கு இச்சிகிச்சை நல்ல பலனளிக்கக்கூடியது. இப்போது அனைத்து வயதினரும் தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகுவலி, அசிடிட்டி, அஜீரண கோளாறுகளால் அவதிப்படுவதைப் பார்க்கிறோம். இவர்களுக்கும் பெண்களுக்கு ஏற்படும் தைெராய்ட், மாதவிடாய் கோளாறுகளுக்கும் இந்த சிகிச்சை சிறந்தது.

வலது பாதமும், இடது பாதமும் முறையே உடலின் வலது மற்றும் இடது பக்கங்களோடு தொடர்புடையவை. உள்பாதங்கள் வயிறு, சிறுநீரகம், கல்லீரல் மற்றும் கணையத்தோடு இணைபவை. பெருவிரல் தலை, கழுத்தோடு ஒத்துள்ளவை. பாதத்தின் பந்துப்பகுதி, தோள் களோடும், குதிகால் இடுப்போடும் தொடர்புடையது.

உடலின் வெளி உறுப்புகளான கை, கால், மூட்டுகள் மற்றும் எலும்பு தசைநார்கள் பாதங்களின் வெளிப்புற ஓரங்களோடு இணைபவை. இப்படி முக்கியமான உள் உறுப்புகள் அனைத்தும் பாதப்புள்ளிகளுடன் இணைந்திருப்பதால், பாதங்களில் அளிக்கப்படும் மசாஜ் மூலம் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஆஸ்துமா, ஒவ்வாமை,, சைனஸ், ெடான்சில்ஸ் போன்ற பலவிதமான நோய்களுக்கும் சிறந்ததாக ரெஃப்ளெக்சாலஜி சிகிச்சையை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள்’’ என்ன நீங்களும் ஒரு முறை ரெஃப்ளெக்சாலஜி சிகிச்சையை எடுத்துக் கொண்டு இளமையாக மாறப் போகிறீர்களா..! வாழ்த்துக்கள்

தொகுப்பு: திவ்யதர்ஷினி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தினமும் உணவில் நெய் சேர்ப்பது உடலுக்கு...

2023-12-09 18:58:12
news-image

உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கா?

2023-12-08 16:38:54
news-image

முளைகட்டிய தானியங்களை சாப்பிடுபவர்களா நீங்கள்.? இதோ...

2023-12-06 20:20:05
news-image

புற்றுநோய் அறிகுறிகளில் அலட்சியம் வேண்டாம்!

2023-12-05 17:55:17
news-image

மருதாணி போட்டுகொள்ளப் போகிறீர்களா?

2023-12-04 16:42:05
news-image

புற்றுநோய்க்கு மருந்தாகுமா தேன்?

2023-12-02 12:38:53
news-image

‘குட்நைட்’ சொல்லப் பயமா?

2023-11-28 14:29:14
news-image

என்ட்டி பயோட்டிக்: ஹீரோவா, வில்லனா?

2023-11-25 16:33:21
news-image

நீரழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்,...

2023-11-24 17:22:53
news-image

தொப்பையைக் குறைக்க வேண்டுமா?

2023-11-24 10:50:35
news-image

நீரிழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு நிலையில் நீங்கள்...

2023-11-23 10:20:11
news-image

பெண்களை குறிவைக்கும் குதிக்கால் வலி!

2023-11-22 16:47:04