(செய்திப்பிரிவு)
பொலன்னறுவை மாவட்ட விவசாய சமூகத்தினருக்கும், விளையாட்டுத்துறை , இளைஞர் விவகாரம் மற்றும் அபிவிருத்தி மேற்பார்வை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிற்கும் இடையில் இன்று சனிக்கிழமை பொலன்னறுவையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போது அமைதியற்ற தன்மை காணப்பட்டது.
விவசாயிகள் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் கடிதமொன்றை முன்வைத்தனர். இரு தரப்பினருக்கும் இடையிலான கருத்து பரிமாற்றத்தின் போது அமைதியற்ற தன்மை நிலவியது.
நெல்லின் விற்பனை விலை 60 ரூபாவாக அறிவித்துள்ளதால் தாம் பொருளதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் இதன் போது விசனம் தெரிவித்தனர்.
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும். அனைத்து காரணிகளையும் ஆராய்ந்தே நெல்லின்விற்பனை விலை தீர்மானிக்கப்பட்டது. நாடு தற்போது எதிர்க் கொண்டுள்ள நிலையை அனைத்து தரப்பினரும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ விவசாயிகளிடம் குறிப்பிட்டார்.
விவசாயிகளின் பிரச்சினைகளை குறிப்பிட்டுக் கொண்டு ஒரு சிலர் தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.
விவசாயத்துறையில் கடந்த அரசாங்கம் செய்த தவறுகள் தற்போது திருத்தப்பட்டு வவிவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளன என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இதன் போது குறிப்பிட்டார்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM