பாரதியார் நினைவு நாளில் இந்திய பிரதமர் மோடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published By: Digital Desk 3

11 Sep, 2021 | 10:14 PM
image

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி, ஆண்டுதோறும் செப்டம்பர் 11 ஆம் திகதி மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்பன உள்ளிட்ட 14 அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். 

அதன் தொடர்ச்சியாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (11/09/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்விருக்கை அமைக்கப்படும்.

தமிழ் படிக்கவும், தமிழ் ஆய்வு மாணவர்களுக்கும் பாரதி இருக்கை பயன்படும். பாரதியார் நினைவு நூற்றாண்டை  ஒட்டி பாரதி இருக்கை அமைக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பாரதியாருக்கு புகழாரம் சூட்டினார். 

' சிறப்பு வாய்ந்த சுப்பிரமணிய பாரதியின் 100-வது நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்துவதாகவும், இந்த நினைவு தினத்தில் அவரது  பெரும்புலமை, நாட்டுக்கு ஆற்றிய பன்முகப்பங்களிப்பை நினைவில் கொள்வோம், சமூக நீதி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நினைவில் கொள்வோம் ' எனவும் கூறியிருந்தார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13