முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு  மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் புகைப்படங்களை துமிந்த சில்வாவின் சகோதரியான டிலினி சில்வா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மீது துப்பாக்கிச்கிச்சூடு  நடத்தப்பட்ட  போது துமிந்த சில்வாவின் தலையில் துப்பாக்கி தோட்டா துளைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது இவருக்கு மண்டையோட்டுப்பகுதியில்  சிங்கப்புர் வைத்தியசாலையில் வைத்து சத்திரசிகிச்சை செய்யப்பட்டிருந்தது. இந்த சத்திர சிகிச்சையின்  போது எடுக்கப்பட்ட 17 புகைப்படங்களை டிலினி சில்வா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கில் துமிந்த சில்வாவுக்கு  மரண தண்டனை விதித்து தீர்பளித்த பின்னர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகளான ஹிருணிகா பிரேமச்சந்திர தனது தந்தையின் தலையில் துப்பாக்கிச்சூடு பட்ட புகைப்படத்தினை சமுக வளைத்தளமான பேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலடி தருமாறு துமிந்த சில்வாவின் சத்திரசிகிச்சை புகைப்படத்தை டிலினி சில்வா வெளியிட்டுள்ளதாக சமுக வளைத்தளங்களில் பேசப்பட்ட வருகின்றது.