எம்.எம்.சில்வெஸ்டர்

டோக்கியோ பரா  ஒலிம்பிக்கில் உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்ற தினேஷ் பிரியன்தவுக்கு அவரதது சொந்த ஊரான கெக்கிராவா காகமவில் ‍குடும்பத்தார் ,உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பிரதேசவாசிகளால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கை இராணுவத்தின் கஜபா ரெஜிமெண்டைச் சேர்ந்த தினேஷ் பிரியன்த தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு நேற்று  ஹெலிகொப்டர் மூலமாக காகம தாதுசேன மகா வித்தியாலய மைதானத்தில் தரையிறங்கினார்.

தங்கப் பதக்கம் வென்று தினேஷ் பிரியன்தவுக்கு அப்பகுதி விகாரைகளிலுள்ள தேரர்கள், அரசியல்வாதிகள் , பிர‍தேச வாசிகள் , நண்பர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.