எம்.மனோசித்ரா
நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 5040 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட்டில் ஐரோப்பிய நாடுகளிலிருந்தே 48.1 வீதம் என்றவாறு அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய ஐரோப்பிய நாடுகளிலிருந்து 2425 (48.1%) சுற்றுலா பயணிகளும் , ஆசிய மற்றும் பசுபிக் நாடுகளிலிருந்து 1602 (31.8 % ) சுற்றுலா பயணிகளும், அமெரிக்காவிலிருந்து 914 (18.1 % ) சுற்றுலா பயணிகளும், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 84 (1.7 % ) சுற்றுலா பயணிகளும் மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து 15 (0.3 % ) சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் தொடக்கம் ஆகஸ்ட் வரை எந்தவொரு சுற்றுலா பயணிகளும் வருகை தரா நிலையில் , இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 5040 ஆகக் காணப்படுகின்றமை சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பை காண்பிப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறிருப்பினும் 2020 இல் ஜனவரி - ஆகஸ்ட் வரை 507 311 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். எனினும் இவ்வாண்டு குறித்த 8 மாதங்களிலும் 24 377 சுற்றுலா பயணிகள் மாத்திரமே வருகை தந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM