எம்.மனோசித்ரா
பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் மற்றும் வெளிப்பாடுகளிலும் ஒழிப்பதற்காக அனைத்து நாடுகளும் ஒன்றிணைவதற்கான தேவையை இலங்கை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்த விரும்புவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் செப்டெம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு நேற்றுடன் 20 ஆண்டுகள் நிறைடைந்துள்ளமையை முன்னிட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த பல அப்பாவி மக்களின் உயிர் மற்றும் உடலுறுப்புக்களின் இழப்புக்கு வழிவகுத்த அமெரிக்காவின் மீது நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று நேற்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
அமெரிக்காவின் சமகால வரலாற்றில் மிகவும் வேதனையான நிகழ்வை அவர்கள் நினைவுகூரும் இத்தருணத்தில், அமெரிக்க மக்கள் மற்றும் அரசாங்கத்துடனான தனது ஒற்றுமையை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்துகின்றது.
கொடூரமான இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதற்கு இலங்கை விரும்புகின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM