சப்ரகமுவ மாகாணத்தில் சாதாரண தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களை மத்திய மாகாண பாடசாலைகளில் உள்வாங்குவது தொடர்பான முறுகல் நிலைக்கு தீர்வுகாணும் முகமாக இறக்குவானை பரியோவான் கல்லூரியில் நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தில் உயர்தரத்தில் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப பிரிPவுகள் இல்லாத காரணத்தினால் அந்தப் பிரிவுகளில் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் மத்திய மாகாண பாடசாலைகளில் அனுமதி பெற்றுள்ளனர்.
எனினும் நுவரெலிய மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் சப்ரகமுவ மாணவர்களை இணைத்துக்கொள்வதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நுவரெலிய மாவட்டத்தில் கல்வி கற்ற சப்ரகமுவ மாணவர்கள் உடனடியாக அங்கிருந்து அனுப்பப்பட்டனர்.
இது தொடர்பில் இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அமைச்சரிடமிருந்து சாதகமான பதில் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
எனினும் சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளில் கணித, விஞ்ஞான பிரிவுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் அறிவித்தார்.
இந்த திட்டத்துக்கு காலம் தேவைப்படும் என்பதால் இம்முறை குறித்த மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என பல்வேறு வகையிலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது.
மலையக மக்கள் முன்னணியின் உப தலைவர் ரூபன் பெருமாள், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எம். சந்திரகுமார், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள், ஊடகவியலாளர்கள் என அனைவரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் அனைத்து தரப்பினரதும் கருத்துக்கள் பெறப்படவுள்ளதால் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM