இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 28 ஓட்டங்களால் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Congratulations all around for a job well done by South Africa

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரில் விளையாடி வருகின்றது.

இந்நிலையில் தொடரின் முதல் போட்டி நேற்று கொழும்பு ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

Debutant Maheesh Theekshana appeals for Heinrich Klaasen's wicket as Aiden Markram looks on, Sri Lanka vs South Africa, 1st T20I, Colombo, September 10, 2021

இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

Dinesh Chandimal celebrates his fifty

தென்னாபிரிக்க அணி சார்பில் எய்டன் மார்க்ரம் 1 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடங்கலாக 48 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 23 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில்,164 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 28 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

Avishka Fernando fell short to a direct hit from Anrich Nortje, Sri Lanka vs South Africa, 1st T20I, Colombo, September 10, 2021

இலங்கை அணி சார்பில் தினேஷ் சந்திமால் 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 66 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணியின் கேஷவ் மஹராஜ் 19 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.Quinton de Kock goes over the top, Sri Lanka vs South Africa, 1st T20I, Colombo, September 10, 2021

இப் போட்டியின் ஆட்டநாயகனாக தென்னாபிரிக்க அணியின் எய்டன் மார்க்ரம் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2 ஆவது இருபதுக்கு - 20 போட்டி நாளைய தினம் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.