இலங்கை - இந்திய நட்புறவு சங்கத்தினால் கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு சுமார் 10 இலட்சம் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள்  கொழும்பில் இன்று மாலை கையளிக்கப்பட்டது.

இலங்கை - இந்திய நட்புறவு சங்கத்தின் நிதி திரட்டலினுடாக கொவிட் தொற்றால் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தீவிர சிகிச்சை பிரிவுக்கு தேவையான  கொவிட்19 சிகிச்சை உபகரணங்களே இவ்வாறு கையளிக்கப்பட்டன.

குறித்த உபகரணங்கள்  இலங்கை - இந்திய நட்புறவு சங்கத்தின் சார்பில்  சங்கத் தலைவர் ரொஹான் ஆர் துடாவேயினால்   கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையின் வைத்தியர் கோசல கருணாரத்னவிடம்  கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில்  கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையின் வைத்தியர்  செனாலி வில்லியம், இலங்கை இந்திய நட்புறவு சங்க செயலாளர் நீலகண்டன் சரவணன், சங்கத்தின் உறுப்பினர்களான டப்சி கனகரட்ணம், சாமுவேல் சாயு மற்றும் சட்டத்தரணி இலியாஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்..