அமெரிக்காவின் இல்லினொய்ஸ் மாகாணத்திலுள்ள கிழக்கு செயின்ட் லூயிஸ் நகரில் கிழக்கு பகுதியிலுள்ள இறைச்சி சந்தைக்கு வெளியே நேற்று முன்தினம் மாலை மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். 

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் தலைமறைவாகிய நிலையில், துப்பாக்கிதாரிகளை பொலிஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இந்த துப்பாக்கிச் சூட்டின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.