குறைவான மாணவர் தொகையைக் கொண்ட பாடசாலைகளை திறக்க முடியுமா ? அறிக்கை கோரும் ஜனாதிபதி

By Gayathri

10 Sep, 2021 | 10:04 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் காணப்படுகின்ற 100 க்கும் குறைவான மாணவர் தொகையைக் கொண்ட கிராம மட்டத்தில் உள்ள பாடசாலைகளையேனும் ஆரம்பகட்டமாக திறக்க முடியுமா? என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை இணையவழியூடாக நடைபெற்ற கொவிட் செயலணி கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது:

தடுப்பூசி வழங்குதல் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் இந்த கலந்துரையாடலின் பிரதான கருப்பொருளாகக் காணப்பட்டது. 

இரண்டாம் கட்டமாக வழங்குவதற்கு தேவையான ஒரு இலட்சத்து 20,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகள் அடுத்த வாரத்தில் கிடைக்கப்பெறவுள்ளதாக இதன்போது விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களில் பெருமளவானோர் 60 வயதுக்கு மேற்பட்டோர் என்றும், இவர்களில் அதிகமானோர் முதற்கட்டமாகவேணும் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்கள் என்றும் இதன்போது சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டினர்.

இதனால் நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். 

அத்தோடு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் பின்வாங்குபவர்களுக்கு அது தொடர்பில் தெளிவுபடுத்துமாறும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

மரக்கறிகளை பயிரிடும் விவசாயிகள் அவற்றை சந்தைகளுக்கு விநியோகிக்க முடியாமையால் பாரிய இன்னல்களை எதிர்கொண்டுள்ளதால், பொருளாதார மத்திய நிலையங்களை திறந்து வைத்திருக்குமாறு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்தார்.

மேலும் 2020 மற்றும் 2021 இல் பாடசாலைக்கு செல்ல முடியாமல் போன 7 இலட்சம் சிறுவர்களுக்கான ஆரம்ப கல்வி மற்றும் அவர்களது கல்வியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. 

100 க்கும் குறைவான மாணவர் தொகையைக் கொண்ட 3000 பாடசாலைகள் கிராம மட்டங்களில் உள்ளன.

அதற்கமைய முதற்கட்டமாக அவ்வாறான பாடசாலைகளை திறக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளனவா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார மற்றும் கல்வித்துறை சார் அதிகாரிகள் உள்ளடங்கிய தொழிநுட்ப குழுவிற்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை...

2022-10-07 12:10:56
news-image

சர்ச்சைக்குரிய இந்திய நிறுவன மருந்துகள் இலங்கையில்...

2022-10-07 12:10:55
news-image

அவசியமான விடயங்களை இலங்கை செய்வதற்காக காத்திருக்கின்றோம்...

2022-10-07 11:55:23
news-image

வீடொன்றிலிருந்து 6 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்...

2022-10-07 12:15:36
news-image

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

2022-10-07 12:12:33
news-image

நாவலப்பிட்டியில் துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது

2022-10-07 10:49:00
news-image

மினுவாங்கொடை முக்கொலை ; இதுவரை 6...

2022-10-07 10:12:27
news-image

தேசிய சபையின் கூட்டத்தில் இரண்டு உப...

2022-10-07 10:45:59
news-image

13 வயது சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய...

2022-10-07 10:44:53
news-image

உருவானது அம்மான் படையணி ! 

2022-10-07 10:27:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய...

2022-10-07 09:41:14
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-10-07 08:38:12