வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்ணகிபுரத்தில் குடும்பப்பெண் ஒருவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் தாக்குதலை மேற்கொண்டதில் குறித்த குடும்பப்பெண் படுங்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

 வாழைச்சேனை, கண்ணகிபுரத்தில் வசித்துவந்த 37வயதுடைய ய பெண்ணே இவ்வாறு தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபராவார்.

தாக்கப்பட்ட பெண் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அதேவேளை தாக்குதலை நடத்திய இளைஞர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.