இந்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் இம்மாதம் இலங்கை வரவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த விஜயத்தின் போது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கடந்த மாதம் இலங்கை வர இருந்த நிலையில் தவிர்க்கமுடியாத காரணத்தினால் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை எனவும் இம் மாதம் விஜயம் செய்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.