ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் 'ஃபர்ஸ்ட் லுக்' போஸ்டரை திரைப்படத் தயாரிப்பாளர்கள் செப்டம்பர் 10 விநாயக சதுர்த்தியான இன்றைய தினம் வெளியிட்டுள்ளனர்.

Image

சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் அண்ணாத்த. இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். 

இந்த படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்தரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

தீபாவளிக்கு (நவம்பர் 4) அண்ணாத்த திரைப்படம் வெளியாகும் என்று ரஜினிகாந்தின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.