5,000 தீக்குச்சிகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை

Published By: Digital Desk 3

10 Sep, 2021 | 10:28 AM
image

இந்தியாவில் ஒடிசா மாநிலத்தின் பூரி நகரை சேர்ந்தவர் சஸ்வத் சாஹூ.  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வித்தியாச விநாயகர் வடிவம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

அவர் 5,621 தீக்குச்சிகளை பயன்படுத்தி 8 நாட்களாக சிலையை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். 

இதன் பயனாக 23 அங்குலம் நீளம் மற்றும் 22 அங்குலம் அகலம் கொண்ட விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளார்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி என்னுடைய வீட்டிலேயே வழிபடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

விநாயக சதுர்த்தி (Ganesha Chaturthi) என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right