ஒட்டுச்சுட்டான் பகுதியிலிருந்தும் முருங்கன் பகுதியிலிருந்தும் பியகம பகுதிக்கு அனுமதிபத்திரமில்லாமல் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட பெருமதிவாய்ந்த  மரக்குற்றிகளுடன் புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 6ஆம் கட்டை மற்றும் 7ஆம் கட்டைப் பகுதியில்  3 பேர் கைது செய்யப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்  தெரிவித்தனர்.

சந்தேகத்திற்கிடமான லொறியைச் சோதனையிட்ட போதே இவ்வாறு குறித்த மூவரும் பெருமதிவாய்ந்த  மரக்குற்றிகளுடன் கைது செய்யப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர். 

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கருவெலகஸ்வெவ வனஜீவராசிகள் தீணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.