(க.கிஷாந்தன்)மறைந்த கோட்டை நாகவிகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித்த தேரரின் இறுதிக் கிரியைகளை முன்னிட்டு இன்றைய தினம் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 
இதன் காரணமாக நாட்டில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்கள், இறைச்சி விற்பனை நிலையங்களும் இன்றைய தினம் மூடப்பட வேண்டும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும் அந்தவகையில் மலையகத்தில் அனைத்து பாகங்களிலும் மதுபான விற்பனை நிலையங்கள், இறைச்சி விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருந்த நிலையில் ஹட்டன் நகர பகுதியில் ஹட்டன் பஸ் நிலையத்திற்கு அருகாமையில் கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபன மீன் கடை மட்டும் திறந்து வியாபாரம் செய்தார்கள்.
இது தொடர்பாக நாம் மேற்படி மீன் கடை முகாமையாளரிடம் கேட்டபோது,
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபன தலைமையகத்தில் தனக்கு திறந்து வியாபாரம் செய்யும்படி உத்திரவிட்டதன் காரணமாகவே தான் திறந்து வியாபாரம் செய்ததாக அவர் தெரிவித்தார்.
எனினும் இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஹட்டன் பகுதியில் உள்ள ஏனைய வர்த்தகர்கள் தெரிவித்தனர்.