வட மாகாணத்தில் 459 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : 8 பேர் உயிரிழப்பு

Published By: Digital Desk 4

09 Sep, 2021 | 05:15 PM
image

வடக்கு மாகாணத்தில் நேற்று (08) புதன்கிழமை 459 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் செப்டம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் வடக்கு மாகாணத்தில் 4 ஆயிரத்து 546 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 121 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதாரத் துறையின் இன்றைய அறிக்கையின் படி, நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 178 தொற்றாளர்களும், வவுனியா மாவட்டத்தில் 121 தொற்றாளர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 77 தொற்றாளர்களும், முல்லைத்தீவில் 57 தொற்றாளர்களும், மன்னாரில் 27 தொற்றாளர்களும், அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 பேரும், மன்னார் மாவட்டத்தில் 2 பேரும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா ஒருவரும், கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

2020 மார்ச் தொடக்கம் நேற்றுவரை வடக்கு மாகாணத்தில் 31 ஆயிரத்து 375 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 530 பேர் கோவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அதிகப்படியாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 651 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 311 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணில் - சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை...

2025-02-08 23:33:26
news-image

அரசியலமைப்பு விடயங்களை பிற்போட்டால் மாகாணசபைகளை செயற்படுத்த...

2025-02-08 23:32:15
news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31