அத்தியாவசியப் பொருட்களை பதுக்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் - அமைச்சர் பந்துல

Published By: Gayathri

10 Sep, 2021 | 11:39 AM
image

(இராஜதுரை ஹஷான்)

சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அவை நிவாரண விலைக்கு விற்பனை செய்யப்படும். 

ஆகவே வியாபாரிகள், பிரதான நிலை உற்பத்தியாளர்கள் அத்தியாவசிய பொருட்களை பதுக்குவதை இனி தவிர்த்துக்கொள்ள வேண்டும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை நிவாரண அடிப்படையில் விநியோகிக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.

அரிசி விலையை நிர்ணயத்தன்மையில் பேணுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. 

இதன் காரணமாக ஒரு கிலோகிராம் நாட்டரிசி 120 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி 150 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டன.

விவசாயத்துறை அமைச்சு, வர்த்தகத்துறை அமைச்சு ஒன்றிணைந்து அரிசியின் விலையை நிர்ணய தன்மையில் பேணுவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தன. 

இதற்கமைய  பெரும்போக விளைச்சலை தொடர்ந்து நாட்டரிசி ஒரு கிலோகிராம் 98 ரூபாவிற்கும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 103 ரூபாவிற்கும் வழங்க பிரதான அரிசி உற்பத்தியாளர்கள் வாக்குறுதியளித்தார்கள்.

இருப்பினும் கடந்த இரு வாரகாலமாக அரிசி உற்பத்தியாளர்கள் சந்தைக்கு முறையாக அரிசியை விநியோகிக்கவில்லை. அத்துடன் சதொச நிறுவனத்தின் விலைமனுகோரலுக்கு சமூகமளிக்கவுமில்லை.

வழமையாக ஒரு நாளைக்கு 5 தொடக்கம் 6 இலட்சம் கிலோ வரையிலான அரிசியை சந்தைக்கு விநியோகிக்கும் பிரதான நிலை உற்பத்தியாளர்கள் கடந்த இரு வாரங்களில் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் கிலோ அரிசியை மாத்திரம் சந்தைக்கு விநியோகித்தார்கள்.

அரிசி விநியோகத்தை குறைத்து சட்டவிரோதமான முறையில் அரசியை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு பிரதான நிலை அரிசி உற்பத்தியார்கள் வகுத்த சூழ்ச்சி அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் முறியடிக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்கள் கைப்பற்றப்பட்டு அவை சதொச விற்பனை நிலையத்தின் ஊடாக நிவாரண விலைக்கு விற்பனை செய்யப்படும். 

ஆகவே வியாபாரிகள், அத்தியாவசிய பொருள் உற்பத்தியாளர்கள் அத்தியாவிய பொருட்களை பதுக்குவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

சீனி பிரச்சினைக்கு  தற்போது தீர்வு வழங்கப்பட்டுள்ளது. குறைந்தப்பட்ச சில்லறை விலை 116 ரூபாவாகவுள்ளது. 

ஓரிரு வாரங்களில் சீனியின் விலை நிர்ணய தன்மை பேணப்படும். நுகர்வோர் சதொச  விற்பனை நிலையத்தில் 3 கிலோகிராம் சீனியை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22