(இராமேஸ்வரத்திலிருந்து ஆ.பிரபுராவ்)

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர் ஒருவரை இந்திய கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

மீனவர்கள் கொடுத்த தகவலுக்கு அமைய குறித்த நபரை தனுஷ்கோடி மூன்றாம் மணல்திட்டில் வைத்து கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபரிடம் இந்திய ரூபாவில் ஒரு இலட்சம் மதிப்புடைய அமெரிக்க டொலர்கள் இருந்துள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த அருள் ஜெயரத்னம் (42) என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் இந்திய பொலிஸார், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.