கர்ப்பம் தரித்தலை பிற்போடுமாறு விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ அத்தபத்து ஆலோசனை ! 

By T Yuwaraj

08 Sep, 2021 | 09:30 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்று ஏற்பட முன்னர் உலகலாவிய ரீதியில் கருவிலேயே 2 மில்லியன் சிசுக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தது.

தற்போது கொவிட் தொற்றும் ஏற்பட்டுள்ளமையால் இந்த எண்ணிக்கை மேலும் 2 இலட்சத்தால் அதிகரிக்கக் கூடும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளதாக சொய்சா மகளிர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ அத்தபத்து தெரிவித்தார்.

எனவே தற்போதைய கொவிட் நிலைமையினைக் கருத்திற் கொண்டு ஏற்கனவே குழந்தைகளையுடைய தாய்மார் கர்ப்பம் தரித்தலை ஒரு வருடத்திற்கேனும் பிற்போட வேண்டும் என்று அறிவுறுத்துவதாகவும் விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ அத்தபத்து தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இன்றைய சூழலில் கர்ப்பிணிகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகுதல் பாரிய அபாயத்தை ஏற்படுத்தும். எனவே ஏற்கனவே குழந்தைகளை உடையவர்கள் சிந்தித்து கர்ப்பம் தரித்தலை பிற்போடுமாறு அறிவுறுத்துகின்றோம்.

காரணம் தடுப்பூசிகளை ஏற்றி சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுகின்ற போதிலும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகக் கூடிய வாய்ப்புக்கள் சகலருக்கும் காணப்படுகிறது.

எனவே நிகழ்காலத்தை விட சிறந்த எதிர்காலம் உருவாகும் என்ற நம்பிக்கையுடனேயே இந்த அறிவுரையை முன்வைக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right