(நா.தனுஜா)

பொதுத்தேர்தலில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ குருணாகல் மாவட்டத்திலும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டையிலும் போட்டியிட்டார்கள் என்பதற்காக அரசியல் நலன்நோக்கில் அம்மாவட்டத்திற்கு பைஸர் தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை.

மாறாக வைரஸ் பரவல் அச்சுறுத்தல் உயர்வாகக் காணப்படும் மேல்மாகாணத்திற்கு அதிகளவான தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே அம்மாவட்டத்திற்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. 

எனவே இவ்விவகாரம் எவ்வகையிலும் அரசியல்மயப்படுத்தப்படவில்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக்காரியாலயத்தில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

20 வயதிற்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி வழங்குவதற்கென அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு பைஸர் தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எதிர்த்தரப்பினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். 

பொதுத்தேர்தலில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ குருணாகல் மாவட்டத்திலும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டையிலும் போட்டியிட்டார்கள் என்பதற்காக அரசியல் ரீதியில் அம்மாவட்டத்திற்கு பைஸர் தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை.

மாறாக கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் உயர்வாகக் காணப்படும் மேல்மாகாணத்திற்கே அதிகளவான தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. 

அதனைத்தொடர்ந்து மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கும் பைஸர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே தடுப்பூசி வழங்கல் பணிகள் எவ்வகையிலும் அரசியல்மயப்படுத்தப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும், எனக் குறிப்பிட்டார்.

தடுப்ப