11 வயது பிக்குவை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிரதம பிக்குவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

Published By: T Yuwaraj

08 Sep, 2021 | 08:36 PM
image

மட்டக்களப்பு புன்னைக்குடா விகாரையில் பிக்குவாக தங்கி இருந்து படித்து  வந்த 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட விகாரையின் பிரதம பிக்குவை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் இன்று புதன்கிழமை (08) உத்தரவிட்டார்.

மட்டு விகாரையில் 11 வயது பிக்குவை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிரதம பிக்குவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

குறித்த விகாரையில் பிக்குவாக தங்கி இருந்து படித்து வந்த 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம்  மேற்கொண்ட விகாரையின் பிரதம பிக்குவை கடந்த மாதம் 25 ஆம் திகதி பொலிசார் கைது செய்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை இன்று 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது கொரோனா தொற்று தீவிரம் காரணமாக குறித்த பிக்குவை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட முடியாத நிலையில் கணொளி மூலம் அவரை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் இன்னமும் 6.3 மில்லியன் மக்கள்...

2023-03-25 12:25:24
news-image

சுற்றுலா பயணிக்கு பாலியல் தொந்தரவு ;...

2023-03-25 12:02:54
news-image

சாலியபீரிசின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் -...

2023-03-25 12:03:33
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில்...

2023-03-25 11:47:57
news-image

கட்டாரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இலங்கையர்...

2023-03-25 11:52:32
news-image

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை...

2023-03-25 11:05:13
news-image

இரு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும்...

2023-03-25 11:20:19
news-image

லாவோஸின் பலவந்த நிதி மோசடி கும்பலிடம்...

2023-03-25 10:35:54
news-image

900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு வந்த...

2023-03-25 10:04:08
news-image

மின்சார சபையின் பாவம் நாட்டு மக்கள்...

2023-03-25 08:58:04
news-image

பல பகுதிகளில் 50 மி.மீ.க்கு மேல்...

2023-03-25 08:46:11
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம்...

2023-03-24 18:04:18