இந்தியாவின் முதன் முதலாக  டைம் லூப் வடிவில் தயாராகியிருக்கும் 'ஜாங்கோ' படத்தின் இசை வெளியீடு சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

No description available.

அறிமுக இயக்குனர் மனோ. கார்த்திகேயன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் முதல் திரைப்படம் 'ஜாங்கோ'. இதில் புதுமுக நாயகன் சதீஷ்குமார் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக டப்ஸ்மாஷ் மற்றும் 'டிக் டொக்' புகழ் மிருணாளினி ரவி நடித்திருக்கிறார். 

இவர்களுடன் நடிகை அனிதா சம்பத், நடிகர்கள் ஹரிஷ் பேராடி, வேலுபிரபாகரன், கருணாகரன், ரமேஷ் திலக், டேனியல் அன் போப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக். கே. தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜிப்ரான் இசை அமைத்திருக்கிறார்.

No description available.

இப்படத்தில் பின்னணி பாடகர் ஹரிச்சரண் பாடிய 'அனலே அனலே...' என தொடங்கும் சிங்கிள் ட்ராக் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், படத்தில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்குபற்றினர்.

படத்தைப் பற்றி இயக்குனர் மனோ கார்த்திகேயன் பேசுகையில்,' தமிழ் திரையுலகில் டைம் டிராவல் அடிப்படையில் பல திரைப்படங்கள் தயாராகி மக்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆனால் டைம் லூப் அடிப்படையில் முதல் திரைப்படமாக 'ஜாங்கோ' உருவாகி இருக்கிறது. கதையின் நாயகனுக்கு ஒரு குறிப்பிட்ட நாளில் நடைபெற்ற நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழும். அவை வித்தியாசமான திரைக்கதையுடன் சுவராசியமான முறையில் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் ஜிப்ரானின் இசை ரசிகர்களை தன் வசப்படுத்தும்.' என்றார்.