கொரோனா தொற்றாளர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாமா?

Published By: Digital Desk 3

08 Sep, 2021 | 04:59 PM
image

(நா.தனுஜா)

கொவிட் - 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதிலிருந்து 28 நாட்கள் முடிவடைந்த பின்னரோ அல்லது அவர் முழுமையாகக் குணமடைந்து 14 நாட்கள் பூர்த்தியடைந்ததன் பின்னரேயே தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்தியநிபுணர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் 20 வயதிற்கு மேற்பட்டோருக்கான கொவிட் - 19 தடுப்பூசி வழங்கல் பணிகள் ஆரம்பமாகியிருக்கும் நிலையில், கொவிட் - 19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது குறித்து பல்வேறு சந்தேகங்கள் காணப்படுகின்றன.

அவைகுறித்துத் தெளிவுபடுத்துகையிலேயே வைத்திநிபுணர் வாசன் ரட்ணசிங்கம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அண்மைக்காலத்தில் கொவிட் - 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் நாட்டுமக்கள் அதிக நாட்டம் காண்பித்து வருகின்றார்கள்.

முதலாம்கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட ஒருவருக்கு இரண்டாம்கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்குரிய காலப்பகுதியில் தொற்று ஏற்படும் பட்சத்திலும் மேற்குறிப்பிட்ட காலஅளவின் அடிப்படையிலேயே இரண்டாம்கட்டத் தடுப்பூசியைப் பெறவேண்டும்.

கேள்வி ; கொவிட் - 19 வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுகின்ற போதிலும் பி.சி.ஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனையின் மூலம் தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளாமல், தாமாகவே சுயதனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் தடுப்பூசியைப் பெறுவதில் எத்தகைய நடைமுறையைப் பின்பற்றவேண்டும்?

பதில் ;  கொவிட் - 19 வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில், பரிசோதனை மூலம் தொற்று ஏற்பட்டிருக்கின்றதா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகும். அவ்வாறு உறுதிப்படுத்திக்கொண்டதன் பின்னர் மேற்கூறப்பட்டவாறான காலஅளவுகளின் அடிப்படையில் தடுப்பூசியைப் பெறமுடியும் என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டாரகமை - களுத்துறை வீதியில் விபத்து...

2024-09-20 15:11:24
news-image

யாழில் பால் புரைக்கேறியதில் 12 நாட்களே...

2024-09-20 14:35:23
news-image

குருநாகல் மாவட்டத்தில் 977 வாக்களிப்பு நிலையங்களுக்கும்...

2024-09-20 14:18:43
news-image

புத்தளத்தில் பீடி இலை பொதிகள் கண்டுபிடிப்பு

2024-09-20 13:56:51
news-image

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை...

2024-09-20 13:46:29
news-image

ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் கள ஆய்வு

2024-09-20 13:34:43
news-image

தலவாக்கலையில் மரத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

2024-09-20 15:13:33
news-image

நாமலின் குடும்ப உறவினர்கள் துபாய்க்கு பயணம்

2024-09-20 13:34:28
news-image

அம்பாறை மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை...

2024-09-20 13:19:49
news-image

145 வாக்காளர் அட்டைகளை  விநியோகிக்காமல் வைத்திருந்த...

2024-09-20 12:58:18
news-image

மொனராகலை சிறுவர் காப்பகத்தில் இரு சிறுமிகள்...

2024-09-20 12:55:55
news-image

மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலையங்களுக்கும்...

2024-09-20 12:53:25